பக்கம்:அவள்.pdf/381

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அபூர்வ ராகம் 337 'இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சி களுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்து விட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? ராகத்திற்கும் பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே!" 'இப்போ என்னவென்கிறாய்?" 'ஒன்றுமில்லை. ராகத்தின் முடிவும் எடுப்பாய்த் தானிருத்தல் வேண்டும்.’’ கொண்டையைப் போட்டுக் கொண்டு எழுந்தாள். "எங்கே’’ 'கீழே போகணும். இதோ வருகிறேன்..." படுக்கையில் உட்கார்ந்தபடி யோசனையில் ஆழ்ந் தேன். வெளிப்படையாகச் சொல்வி ஆற்றிக் கொள்வதில் ஆறுதலுண்டு. இப்படி வெளிக்காண்பிக்காமலே உள்படும் வேதனைதான் சகிக்க முடியவில்லை. நிம்மதியற்ற உறக்கத்தில் கண்கள் செருகின. நாளைக் காலை எழுந்ததும் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். திருப்பதிக்குப் போவது முடியாது. அம்மா சும்மாயிருக்க மாட்டாள். வீட்டில் ரகளை நடக்கத்தான் போகிறது. நடக்கட்டும். கண்டிப்பாய் நடந்தே தீரும். இருந்தும் வேறு வழியில்லை. இதனால் தெய்வ கோபத் திற்கு ஆளானாலும் சரி. இதற்காக அம்மாவிடமிருந்து கண் மறைவாய் இருக்கும்படி நேர்ந்தாலும் சரி, தெய்வத் தினிடமிருந்து ஓடும்படியிருந்தாலும் சரி. எங்கேயாயினும் இருவரும் போய்விடுவோம். இதற்காக எங்கள் சுபாவம் மீறி எப்படியிருக்க முடியும்? அவளிடம் சொல்ல, அவளையெழுப்புவதற்காக அவள் பக்கம் கையை நீட்டினேன். அவள் இடம் வெறிச் சென்றிருந்தது. விழித்துக்கொண்டேன். 22 سه .ېږي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/381&oldid=741747" இருந்து மீள்விக்கப்பட்டது