பக்கம்:அவள்.pdf/383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரிமேல் காணாமலே காதல் கொண்டுவிட்டேன். நான் குமரன். அவள் குமரி. முதன் முதலில் காதல் வரும் வயதில் வரும் போதே மரங்களைச் சாய்க்கும் புயல் போன்ற காதல். காரணங்கள், எங்கள் குடும்பம் மூன்று தலைமுறை களாகவே சென்னைவாசிகள். எங்களுக்கு வெளிப் பிரயாணத்திற்கு வாய்ப்பு இல்லை. வசதியுமில்லை. வீட்டிலிருந்து வேலைக்கு. (வீட்டிற்குப் பெரியவர்களைச் சொல்கிறேன் ) மாலை, வேலையிலிருந்து வீடு. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறைகளில் கடற்கரைக் காற்று. அந்நாளில் கடற்கரையில் இவ்வளவு கூட்டமுமில்லை. கடுகு தெளித்தாற்போல் தூரத்துக்கு தூரம் கறுப்பும், சிவப்பும், வெள்ளையுமாய்ப் புள்ளிகள் அசையும், நகரும், ஆடும். உருளைக்கிழங்கு மலாலா கறியும், வெங்கா ய சாம்பாரும் சம்பள வாரத்தில் சமைத்துவிட்டால், குழம்பைத் தாண்ட மாட்டோம். மோருக்கு லீவு. அன்று பூரா சாம்பார் சாதத்தை வெட்டுவோம். பள்ளி யில், மதியத்தில் அலுமினியத்தில் (எவர்சில்வராமே...! எப்படி இருக்கும்?) சம்புடத்தைத் திறந்ததும், குழம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/383&oldid=741749" இருந்து மீள்விக்கப்பட்டது