பக்கம்:அவள்.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 லா. ச. ராமாமிருதம் சாதத்தில் இரண்டு உருளைக்கிழங்குப் பத்தைகள் புதைத் திருந்தால் உவகைக்கு கேட்கவே வேண்டாம். நாக்கு சுரக்கையில் தாடை நரம்புகள் இழுக்கும். சுறீ"லெடுக்கும். அன்று உருளைக்கிழங்கின் வில்ை வீசை 5 அன. 6 அனா. முழுக் கத்திரிக்காயை வாயைப் பிளந்து, காரப்பொடி யைத் திணித்துப் பொன்னிறத்தில் எண்ணெயில் வதக்கி, மைசூர் ரசமும் வைத்துவிட்டால்- ஐயோ! ஐயோ! சொர்க்கம். இல்லை. எனக்கு சொர்க்கம் வேண்டாம். ரசமே போறும். எங்களை உருவாக்கிய அந்நாளையச் சமையல்கள். ருசிகள், பசிகள், நடப்பு, பெரியோர் சிறியோர், தாரதம்மியம், மட்டு மரியாதை, பேச்சு, அடக்கம், ஒளிவு, இலை, தழை, காய், பூமறைவு, ஆசைகள், கோபங்கள், அன்புகள், மயக்கங்கள் எல்லாமே வேறு. (காலத்தோடு ஒத்துப் போகாது இந்தக் கிழங்கள்; என்றுமே இதுகளுக்கு அந்த நாளும் வந்திடாதோ? பாட்டுத்தான்!) பொறி கண்டது பொரிந்துவிடாது. கொழுந்து விட் டெரியக் கூசினாலும் தழல் கனிந்து தனக்கே ஒளிந்து வளர்கையில். எனக்கு எப்படித் தெரியும்? இந்த நாள்தான், ஆண் பெண் அடங்கலாக எல்லாம் கெட்ட வெளிச்சம். நெஞ்சத்தின் ஈரத்தையே சுவர்க்கும் வெளிச்சத்தின் வெய்யிலாங் போச்சே! "காதலா? கலியா? முளைச்சு மூணு இலை விடல்லே? பிஞ்சிலே பழுத்த வெம்பல், அதுவும் யார் மேல். அபராதம்! அபராதம்! rமிக்டிவா rமிக்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/384&oldid=741750" இருந்து மீள்விக்கப்பட்டது