பக்கம்:அவள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 லா. ச. ராமாமிருதம்

மேல் குனிந்து சிரிக்கையில் அகிலாவுக்கு என்னவோ பண்ணிற்று. (வயிறு திறந்துகொண்ட மாதிரி என்று சொல்லலாமா) கோலத்தில் சில கோடுகள் அழிந்திருந்தன.

அருகே கைகட்டி நின்ற குருக்கள்மேல் அவள் பார்வை திரும்பியது.

"அகிலா, இவள் நம்மோடு இருக்க வந்திருக்காள்."

அகிலாவின் புருவங்கள் உயர்ந்தன. உடனே சமாதானப்படுத்திகிற மாதிரி, அவர், "இவள் கணவன் வீட்டிலிருந்து வந்திருக்காள்."

கோவிச்சுண்டா?'

குருக்கள் முகம் மாறிற்று. ஒ, இப்படியும் ஒரு கோணம் இருக்கா?

அவள் சிரித்தாள். "சுமாச்சுமா வந்திருக்கேன். ராத்ரி போயிடுவேன்.”

"ராத்ரி என்ன கணக்கு?"

"சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு பகலாகு மோன்னோ?”

அகிலாவுக்குப் புரியவில்லை.

"உள்ளே வா கண்ணு-இல்லே— சத்தேயிரு, கோலத்தில் நிக்கறே. ஆரத்தி கரைச்சு கொண்டு வரேன்.”

அவள் தோளைத் தொட்டபடி, வாசற்படி தாண்டியதும், அவளுக்குக் கழுத்திலிருந்து கால்வரை—"ஜிவ் — உயிர் வெளியே குதிக்கும்போல் பரபரப்பு, ஆனந்தம், பயம். கையை மார்க்குலையில் அழுத்திக்கொண்டாள்.

"ஏண்டிம்மா குழந்தே, மாப்பிள்ளையைக் கூட அழைச்சுண்டு வரப்படாதோ?”

"அவர் மாப்பிள்ளையாச்சேம்மா. அவர் எப்பவும் மாப்பிள்ளை முறுக்குத்தான். எனக்குப் பிறந்தாத்து எண்ணம் வந்துடுத்து, வந்துட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/400&oldid=1497206" இலிருந்து மீள்விக்கப்பட்டது