பக்கம்:அவள்.pdf/402

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


358 லா. ச. ராமாமிருதம் அவள் பொரிக்கப் பொரிக்கப் பொங்கலை விரலால் வழித்து வாயில் கப்பி, விரல்களைச் சப்பினாள். திக்கென்றது. அகிலா குருக்களைத் தேடிச் சென்றாள். அவர் கிணற்றடியில் ஸந்தியாவந்தனம் பண்ணிக்கொண்டிருந்தார். "யார் இந்தப் பெண்? இவளை எங்கே பிடிச்சுண்டு வந்தேன்?" "என்ன ஆச்சு?" நைவேத்யத்தை ருசி பார்த்து, எச்சில் பண்ணி வழிச்சு முழுங்கிண்டிருக்கா.” 'ஓ' குருக்களுக்கு ப்ரமை பிடித்தாற்போல் ஸ்தம் பித்து, உடனே சிரித்துவிட்டார்.

  • இதிலே என்ன சிரிக்கக் கண்டுட்டேள்?’’ குருக்கள் சமாளித்துக்கொண்டு "இதோ பார் அகிலா பொறுத்துக்கோ. இன்னி சாயங்காலம் வரைக்கும்தான்.”

'இதென்ன ரெண்டுபேரும் சாயந்திரத்துக்குக் கண்டம் வெச்சிப் பேசறேள்! அவளை வெள்ளிக்கிழமை அதுவுமா யார் போகச் சொல்றா?' 'அகிலா, அவள் நம் இஷ்டத்திலில்லை. நாம்தான் அவள் இஷ்டத்திலிருக்கிறோம்.' 'இதென்ன பாஷை, என்ன புதிர்?" சாயத்தரம் வரைக்கும்தான்'-கெஞ்சினார். ஒன்றும் புரியவில்லை. பொட்டைத் தேய்த்துக் கொண்டு அகிலா உள்ளே சென்றாள். கூடவே பிடரி குறுகுறுத்தது. பயம்? அவள் டப்பாக்களைத் திறந்து, உள் பார்த்து மூடிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/402&oldid=741771" இருந்து மீள்விக்கப்பட்டது