பக்கம்:அவள்.pdf/410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366 லா. ச. ராமாமிருதம் ஒருநாள். அந்த நாள் அம்மா முத்தம் தந்த நாள். தற்செயலில் என் இடது மணிக்கட்டில் வலது விரல் நுனிப்பட்டு-ஆச்சரியமாயிருந்தது. அப்படியே கையைக் காதண்டை கொண்டுபோய் ஒ ட் டு க் கேட்டேன். காதுக்குத் தெரியல்லே. ஆனால், விரலடியில் 'அம்மா! அம்மா! கை உள்ளே என்னவோ டக் டக் அம்மா சிரித்தபடி, முன்றாணையில் கையைத் துடைத் துக்கொண்டே வந்தாள். பிரிகள் கலைந்து சற்றுப் பரட்டையாகிவிட்ட அவளது நெற்றி மயிர் மாலை மஞ்சள் வெயில் பட்டுப் பொன்னாய்ச் சுடர் விட்டது. என் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு அதுக்கு நாடின்னு பேர்.” அப்படின்னா?” 'உயிர் துடிப்புன்னு அர்த்தம்.' "அப்படீன்னா?' 'நாடி அடிச்சுண்டு இருக்கும்வரை உயிர் இருக்குன்னு அர்த்தம்.” 'அடிக்காட்டி?” உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள். 'உன் கையைக் கொண்டா, பாக்கறேன்!” அவள் மணிக்கட்டில் என் விரல் நுனியை வெச்சுப் பார்த்தேன். 'எனக்கு ஒண்ணும் கேக்கலியே." 'உனக்குப் பார்க்கத் தெரியல்லே அவளே பார்த்துக் கொண்டாள். முகம் மாறிற்று. மறுபடியும் பார்த்துக் கொண்டாள், இந்த முறை நேரமாக. "அப்பா வராளா பாரு' அப்பா வரல்லே. ஆனால், வர நேரம் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/410&oldid=741780" இருந்து மீள்விக்கப்பட்டது