பக்கம்:அவள்.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


370 லா. ச. ராமாமிருதம் நெடுநாளைக்குப் பிறகு நான் அப்பாவிடம் கேட்டது நீண்ட பேச்சுதான். சினிமா டயலாக்' என்று கிசுகிசுத்து அண்ணா தோளையிடித்தான். ஆனால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ துக்கமாயிருந்தது. இதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின் அப்பாவைக் காணவில்லை. மிரண்டு போனோம். தானே பறக்கத் தூக்கியெறிந்த குஞ்சுகளைப்போல. மன்னி ஆருடம் பார்த்தாள். 'மாமனார் உயிரோடு தானிருக்கிறார். நன்றாயிருக்கிறார். இன்னும் இரண்டே வாரத்தில் தானே வந்து சேர்ந்துவிடுவார்!’ ஆச்சு. நிகில் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் முகேஷ-க்கு இப்போ மூணு நடக்கிறது. அப்பாவும் இன்னும் வரப்போகிறார்; அப்பா இனிமேல் வரமாட்டார். அம்மாவின் மறைவுக்குப் பின்னரே, கண்ணெதிரே எங்களுக்குத் தெரியாமலே அப்பா படிப்படியாக மாறி விட்டார். அம்மா போனது அவருக்கு ஊமை அடி. இப்படிக் காணாமல் போக, அமமா போனவுடனேயே திட்டம் போட்டு ஒதுங்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஆகவே, சின்ன வயதிலேயே எங்களுக்கு-எனக்கு அம்மா இல்லை. அப்பா இருந்தும் இல்லை. வண்டி புறப்படும் வரை நான் வெளியே நின்றபடி உள்ளே அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், மன்னி: 'அம்பி, எப்போத்தான் கலியாணம் பண்ணித்து போறேள்? வயசாயிண்டு வரல்வியா? உங்களுக்கா இல்லா விட்டாலும் எனக்காவேனும் பண்ணிக்கோங்கள்ேக:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/414&oldid=741784" இருந்து மீள்விக்கப்பட்டது