பக்கம்:அவள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 375

சாதாரணமாக ஒரு மனோதத்துவக் கோட்பாடு; கனவு என்பதை அடி ப்ரக்ஞையில் புதைந்து கிடக்கும் அந்தரங்க ஆசாபங்கங்கள், ஏக்கங்கள் தங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வடிகால் என்று. அப்படியானால் கனவில் (யார்?) தந்த முத்தம் எதன் அடையாளம்?

த்தனைபேர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். கஸ்டமர்கள் நெரிகிறார்கள். வங்கிக்கு வெளியே ரோடில் வாகனங்கள் பறக்கின்றன. ஆனால், நெஞ்சில் வெறிச்சோடி நிற்கிறேன்.

என்னைத் தனியென்று எந்த நியாயத்தில் சொல்லிக் கொள்ள முடியும், சமுதாயத்தின் நடுவிலேயே இருந்து கொண்டு? என் இஷ்டப்படி இருக்கத்தானே ஹாஸ்டலுக்கும் வந்தேன்?

ஆனால் அண்ணா, மன்னி, குழந்தைகளைப் பார்க்கும் போது குடும்பத்தின் அடைக்கலத்துக்குத் திரும்பி விடலாமா என்று மனம் அடித்துக்கொள்கிறது. எட்டு வருடங்களாகத் தனி அறை, ஒட்டல் சாப்பாடு, வயிற்றுப் புண்ணுக்கு மாத்திரை...

மன்னி, தனிக்குடித்தனம் அலுத்துவிட்டதென்கிறாள், குடும்பம் பெருகிய பின்னும்...

தனிமை-அப்பா, உங்களுக்கு அலுக்கவில்லையா? அலுத்திருந்தால் திரும்பி வந்திருப்பீர்களே!

வெளியூரிலிருந்து வந்தவர்கள் பார்த்தமாதிரி இன்னும் பேசுகிறார்கள்.

"உன் தகப்பனார் ரிஷிகேசில் இருக்கிறார். முக்கியமாக உன்னை ரொம்ப விசாரிச்சார்.'

"அம்பி, என்னன்னு சொல்வேன், மதுரை கோவில் வாசலில் பரதேசிக் கோலத்தில் பிச்சையெடுத்துண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/419&oldid=1497273" இலிருந்து மீள்விக்கப்பட்டது