பக்கம்:அவள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 381

எங்கும் தீபாவளி பேரம் அதன் கடைசி நேரத்தின் சுறுசுறுப்பில் பிதுங்குகிறது.

வீட்டு வாசல்களில் விஷ்ணு சக்கரங்கள், அதிர் வெடிகள், ஊசிப்பட்டாசு சரங்கள், அவுட் வாணங்கள்; தெருவெல்லாம் புகை, கந்தக நாற்றம், கலியான கோலம்.

ஆனால், நான் மட்டும் “வெறிச்.”

நடக்கிறேன்.

நட, நட, நட,

பூமியின் விளிம்புவரை தொடுவானம் எட்டும்வரை காலம் முடியும்வரை

நடந்து முடியும்வரை

நடந்து கொண்டேயிரு.

No use, விடிமோக்ஷமே கிடையாது.

இன்று வருவாளா?

முத்தம் தருவாளா?

தன்னைக் காண்பித்துக்கொள்வாளா?

எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டிருக்கிறதா?

இருப்புக் கொள்ளவில்லை.

அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வருகிறேன்.

வானம் இருண்டிருக்கிறது.

அங்குமிங்குமாய்த் தெரியும் ஒன்றிரண்டு நக்ஷத்ரங்களும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

"என்னைக் காப்பாற்று!"

'அம்மா! இல்லை.' மழை துளிக்கிறது.

இரண்டு சொட்டுக்கள் என் முகத்தில் விழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/425&oldid=1497283" இலிருந்து மீள்விக்கப்பட்டது