பக்கம்:அவள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஒய்வதில்லை 393

இடம் மிகச் சிறியது. சின்ன அறை. அதனுள சின்-ன்-ன சமையலறை அத்துடன் சரி. ஆனால் படு சுத்தம். அது அது அதன் தன் இடத்தில். இல்லா விட்டால் புழங்க முடியாது. சுவர்மேல் சாற்றியிருந்த ஈஸிசேரை விரித்துப் போட்டு, இரு கைகளையும் காட்டினாள். அமர்ந்தார். என்னேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தரோ? மன நிறைவில் பேச்சுக்கிடமில்லை.

"ஏன் நிக்கறே? உட்காரேன்.”

பெருமூச்செறிந்தாள். இதோ ஒரு மினிட், வந்துடறேன். சமையலறைக்குள் சென்றாள்.

"என்ன வாடகை?"

சமையலறையிலிருந்தபடியே, ஏன் கேக்கறிங்க? இருநூற்றிஐம்பது. வரமாதம் 25 கூட்டறான்."

"கட்டுப்படியாகுமா?"

“சமாளிக்கலாம். அவருக்கு வங்கியிலே வேலை, அவர் இறந்ததும், கருணை மனுவிலே எனக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க. பத்து வருடம் சர்வீஸும் போட்டாச்சி.”

"அப்படின்னா சொந்த வீடு கட்டலாமே? வங்கி, கடன் கொடுக்குமே!"

ஆவி பறக்கும் இரு கோப்பைகளுடன் வெளிப்பட்டாள். ஒன்றை அவரிடம் தந்துவிட்டு, அவர் காலடியில் உட்கார்ந்துகொண்டாள்.

"ஒண்டிக்கட்டை வீட்டைக்கட்டி, என்ன செய்யப் போறேன்? யாருக்கு எழுதி வைக்கப் போறேன்?”

"உறவு மனுஷாள் யாரும் இல்லையா?" சற்றுநேரம் சும்மாயிருந்தாள். பிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/437&oldid=1497329" இலிருந்து மீள்விக்கப்பட்டது