பக்கம்:அவள்.pdf/438

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 #4 லா. ச. ராமாமிருதம் 'எனக்கு ஒரு வயதில் ப்ளாட்பாரத்தில் துணியில் சுற்றிக் கிடந்தேனாம். யாரோ எடுத்துப்போய் அனாதை இல்லத்தில் சேர்த் து ட் டு ப் போயிட்டாங்க. அந்த முகத்தைக்கூட நான் அப்புறம் பார்க்கல்லே.' திடுக்கென்று ஆகிவிட்டது. அந்த மூச்சுத் தேம்பலில் அவள் முழுக்கதையே தெரிந்து போயிற்று. அவள் விரித்துச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டாம். 'குழந்தை ஏதேனும்-?’ தயங்கினார். 'ஒண்ணு பிறந்தது. மூணாம் மாசம் அம்மையிலே ரெண்டு கண்ணும் போச்சு. அப்புறம் அதுவும் போயிட் டது. போனதே மேல்.’ இனி மேலே கேட்பதே கொடுமை. ஏதேனும் கேட்டால் ஏதேனும் சொன்னால்? வாழ்க்கையில் ஏன் சிலர், துக்கத்துக்கென்றே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவ னுடைய சோதனைக் கூடத்தில் இப்படியும் ஒரு ஆய்வா? 'இன்னும் எவ்வளவு தாங்குவாய்? இத்தனைக்கும் அவன் அநாதபந்து. ஆனால் அவனே அநாதை! “என் கதையை விடுங்க. நான் யாராலும் வேண்டப் படாதவள். நீங்க எப்படியிருக்கீங்க? பையன்கள் எப்படி இருக்காங்க? மருமவ வந்துட்டுதா?” அவர் வாய் ஏதோ பதில் சொல்லிற்று. மனம் எங்கோ வேலை செய்தது. ஏன் இப்படித் தன்மேலேயே தீர்ப்பு சொல்லிக்கொள்கிறாள்? நோ, ஐ வாண்ட் டு பீ வாண்டட். மிக மிக விரும்புகிறேன். என்னுடைய உபயோகத்துக்காக இல்லாமல், கைம்மாறு எதிர் பார்க்காமல், என்னை எனக்காகவே விரும்பணும். நான் அன்பு தரவும், அன்பு பெறவும் ஆவாஹனம் வேண்டும். குழந்தைக்கு பொம்மைபோல். பொம்மை என்பதைக்கூட மறந்துவிட்டு குழந்தை எப்படி பொம்மையுடன் பேசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/438&oldid=741810" இருந்து மீள்விக்கப்பட்டது