பக்கம்:அவள்.pdf/441

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சூடிக் கொண்டவள் தோட்டத்தில் செம்பருத்திச் செடிகள் இரண்டு. வேறு தாவரங்கள் ஏதேதோ பயிர் செய்ய முயன்றும், மண் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செம்பருத்திச் செடிகளில் மட்டும் தினம் மூன்று நான்கு பூக்களுக்குக் குறைவில்லை. ஒரொரு சமயம் ஏழு, எட்டுகூடப் பூத்துத் தள்ளி விடும். அம்பாளுக்குச் செம்பருத்திப் பூ விசேஷமாமே! சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன். 烹 苯 岑 Goாe ரிலிஜியஸ்? உன் உதட்டுக் குழியில் புன்னகை யின் குமிழ் தெரிகிறது. பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை. இருக்கப் போவதுமில்லை, தெரி கிறது. வட்டம் ஆரம்பித்துப் புள்ளிக்குத் திரும்பி, அதில் முடியப் போகிறதென்று நினைக்கிறேன். முறைதானே! அன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்துக் கூப்பி, ஓம்மாச்சி சொல்வித் தந்தாள். இன்னமும் அம்மா மடி கிடைக்குமா? நானும் ஆசைப் படலாமா? அடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம். அங்கு இடம் என்ன சுலபமா? இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/441&oldid=741814" இருந்து மீள்விக்கப்பட்டது