பக்கம்:அவள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூடிக்கொண்டவள் 399

ன் பங்கில் ஒன்று மன்றாடுகிறேன். தானாக எழுந்த தோற்றம்தான். எண்ணத்தை முறுக்கி நான் வரவழைக்க வில்லை "எப்படியும் முன்னால், முறுக்கி இருப்பாய். முறுக்காமல் இருந்திருக்க முடியாது." சரி, வலுக் கட்டாயத்தில் மட்டும் வந்துவிடுமா? எப்படியும் இந்த வடிவத்தில் நினைக்கவில்லை.

"அது உன் ஸப் கான்ஷியஸ்."

இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே! எதையும் நான் நிரூபிக்க வரவில்லை. எனக்கு நேர்ந்ததை அல்லது நேர்ந்த மாதிரி இருந்ததைச் சொன்னேன். இதுவும் நான் சொல்லதுதான். ஆனால் நேர்வதில் 'மாதிரி' என்பது கிடையாது. நேர்ந்தது நேர்ந்ததுதான். நம்பு என்று சொல்ல நான் யார்?

உருவகம், கனவு, ப்ரமை, ஹம்பக், ஃபான்டஸி இன்னும் என்னென்னவோ, உள்ளத்தின் அவஸ்தையில் உள்ளனவே. இன்றியமையாமையே.

ஆனால், விசாரணை, ருசு, நிரூபனை, தீர்ப்பு, நிபந்தனை. இதையெல்லாம் கடந்து, அறியாத, புரியாத நிலைகளும் இருக்கின்றன என்கிற தடத்தில் சம்மதம் காண்போமா?

ஒன்று நிச்சயம், அவளே இருக்கிறாளா? அது அவனா? அவனா? சர்ச்சையை விற்பன்னர்களுக்கு விட்டு விட்டால், மிஞ்சுவது என்ன? எண்ணத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவேதான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ? ஒரு சமயம் அவள். ஒரு சமயம் அவன்.

சிந்தா நதி தீரே, சிந்தா விஹாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/443&oldid=1497413" இலிருந்து மீள்விக்கப்பட்டது