பக்கம்:அவள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திரா 403

"அந்தக் குழந்தை குறை ப்ரசவமா, நிறை ப்ரசவமா, இருந்து போச்சா, உடனேயே போச்சா, எதுவும் அறியேன். இப்போ நீ அழுவது சுமந்த கனத்துக்கா, வளர்த்த பாசத்துக்கா, உனக்குத்தான் தெரியும். துக்சங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது முறையல்ல. அவரவர் துக்கம் அவரவருடையது. ஆனால் இப்போ உன் மடியில் ஒரு குழந்தையிருக்கிறது. அது உன் முகத்தைப் பார்த்துச் சிரிக்க, நீ அதன் முகத்துள் குனிந்து சிரிக்க..."

இதெல்லாம் நானா? எனக்கும் இப்படிப் பேச வருமா?

அப்புறம் இரண்டு மாதங்களுக்கொரு முறை, அங்கு போவேன். என் வீட்டுக்கு நான் அவர்களை அழைக்க வில்லை. நான் அழைக்காமல் அவர்கள் எப்படி வருவார்கள்? -

கீதாவுக்கு முதல் ஆண்டு நிறைவு வந்தபோது, நான் சீனுவிடம் பணம் கொடுத்து, குழந்தைக்கு ஏற்றபடி, காஞ்சிபுரம் பட்டுத் துண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னேன்.

திணறிப் போனார்கள். எப்படியும் அந்த நாளிலும் அது ஒரு கணிசமான ஐட்டம் அல்லவா?

அது சரி, ஐயாவுக்கு எங்கிருந்து இந்தத் தாராளம்? குழந்தை மேல் பாசம் பொங்கிற்றோ? இல்லை கொல்லையில் காசு மரமா?

திருவல்விக்கேணியில் அதுவும் வாடகை வீட்டில் கொல்லைப்புறமா? இடமும் ஏவலும் நன்றாப் பார்த்துக் கேட்டேளே? அந்தக் குழந்தையை நான் தொட்டது கூட இல்லை.

அப்போ? கர்ண பரம்பரையாக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/447&oldid=1497383" இலிருந்து மீள்விக்கப்பட்டது