பக்கம்:அவள்.pdf/448

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


498 லா. ச. ராமாமிருதம் கர்ணனைப்பற்றிப் பேச்சு எடுத்ததால் சொல்கிறேன்; கொடுப்பது என்பது கருணையால் மட்டும் அன்று, குழந்தையை மூட்டை கட்டி ஆற்றில் விட்ட தொட்டிலி லிருந்து, கடைசியில் உயிர்விட்ட தேர்த்தட்டுவரை, கர்ணன் வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவன். தாயாரி லிருந்து, மனைவியிலிருந்து, தெய்வத்தால்வரை, அம்சங் களுக்குக் குறைவு இல்லை. சாபங்களுக்கும் குறைவில்லை. தாய்மூலம் தன் உண்மை தெரிந்தும், கடைசிவரை வெளிப்படுத்த முடியவில்லையே! உண்மையும் துரோகம், துரோகம் தவிர-அப்பா, வேண்டாம். ஏன் கொடுத்தான்? வாழ்க்கை மேல் வெறுப்பு, தன் மேலேயே வெறுப்பு, கூடவே ஒரு இறுமாப்பு. விதியே, உன் கை வரிசை இவ்வளவுதானா? இதற்குமேலும் உன்னால் முடியுமா? கொடுப்பதில் ஒரு பழிவாங்கல் இருக்கிறது. யாரை? என் விதியை, நான் வந்த வழியை எடுத்துக்கொள். எடுத்துக்கொள், எல்லாவற்றையும் எடுத்துக்கொள். நான் கொடுக்கக் கொடுக்க, எனக்கு விஷய விரக்தி கூடக் கூட, உனக்கு அபஜெயம். அந்த மனநிலையில் இருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கோளேன். இத்தனை கசப்புக்குக் காரணம்? எதற்கு? சொல்வதில் பயனில்லை. அதனால் திலைமை மாறப் போவதில்லை. அதனாலேயே சொல்லத் தேவையு மில்லை. 霹 岑 岑 1951 வாக்கில் எங்கள் வங்கி பெரிய வங்கியோடு இணைந்தபோது, Retrenchment கோடரி பூரீனிவாஸன் மேல் விழுந்தது. பிறகு அவன் பிஸினஸ்ஸில் புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/448&oldid=741821" இருந்து மீள்விக்கப்பட்டது