பக்கம்:அவள்.pdf/455

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவள் உனைத் தொட நேர்ந்ததா? அவள் உன்னைத் தொட்டிருந்தால், நீ அவளுக்குக் கிட்டியிருந்தால்: சிந்திக்காமல் இருக்க முடியவில்லை-ராமகாதையே திசை திரும்பியிருக்கும். அல்லவா? குளம்போசை என்னுள் கேட்கிறது. உயிர் துள்ளு & D5. Heart attack? ஹிந்தோளம், மால்கோஷ், மால்கவுன்ஸ், சந்த்ர ஹான்ஸ், ஸாரமதி-என்று கட்டான்களைக் காட்டி உதறும் ஒரே கோலத்தைக் கேட்டுக் கேட்டுச் செவி பொளிந்துவிட்டது. ஆனால் நீராக ரத்ன மாலிகா. My immortal wounds at of govg Guo! பிதற்றல், பேத்தல்-இத்தனையும் ஜன்னி, அப்படித் தானே! - ஜன்னியில்லாமல், காவியங்கள் உண்டாகியிருக்க முடியாது. லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ெளந்தர்யலகரி, சியாமளா தண்டகம், மேக சந்தேசம், அபிராமி அந்தாதி, பராபரக் கண்ணி, பத்ரகிரிப் புலம்பல்-அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! தேவி! என் பாவி! Mysticism-காதலின் மஹோன்னத தத்துவத்தில் காதற் பொருள்-அது மானாயிருந்தாலென்ன, மனிதை யாயிருந்தால் என்ன? MY dark Gazelle of the Night! சிந்தா நதியில் தட்டிய நிழல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/455&oldid=741829" இருந்து மீள்விக்கப்பட்டது