பக்கம்:அவள்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426 லா. ச. ராமாமிருதம்

"நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் குழந்தை பிறந்திருந்தால்— ஏன் இனியும் பிறக்கலாமே!"

"I don't know. அப்போது என் கணவர் ஏதேனும் யோசனை சொல்வார். ஆனால், நான் மலடு, டாக்டர் சொல்லிவிட்டார்.”

"அவர் அப்படிச் சொன்னது உனக்குக் கஷ்டமாயில்லையா?'

"சில நாட்களுக்கு இருந்தது. அப்புறம்—அப்புறம் you know, we get over things” மறுபடியும் சிரிப்பு. "அம்பாள் கன்யாகுமரியாயிருக்கிறாள். அதே சமயம் அவள் ஜகன்மாதா. எங்கள் மேரி, கன்னிமாதா, நான் எங்களை நியாயப்படுத்திக் கொள்ளவில்லை. உள்ளதைச் சொல்கிறேன்.”

திடீர் என்று வெளிச்சமாய்த் தோன்றினாள். ஒரு தனிப் 'பளிச்' கண்னைக் கசக்கிக்கொண்டார், கண்ணும் இடக்குப் பண்ண ஆரம்பிச்சாச்சா?

—இதோ வருகிறேன் முரளி—என்னை மன்னியுங்கள். குழந்தை அழைக்கிறான்.”

அவசரமாய் எழுந்து ஓடினாள். புடவை தடுக்கி விழ இருந்நாள். வெட்கம், அடக்கம் தெரியாது. பழக்கமில்லாத புடவை கட்டிய இம்சை நடை. அவர் பார்வை அவளைத் தொடர்ந்தது.

"அப்பா உங்களுக்கு உடம்புக்கு என்ன? இதோ பாருங்கள், உங்கள் கண்களில் ஒரு மருட்சி தெரிகிறது. என்னை ஏமாற்ற முடியாது. நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாமோ என்னவோ, இந்தப் பத்து வருடங்களில் நம்மிடையே எந்த மாறுதலும் கிடையாது. வராது. அவள், எனக்கு நேர்ந்த ஒரு மகத்தான விபத்து. அதற்கும் நம் உறவுக்கும் எந்தவித சம்பந்தமும் பண்ணாதீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/470&oldid=1497453" இலிருந்து மீள்விக்கப்பட்டது