பக்கம்:அவள்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 435

"அடியே சிரிக்காதேடி, சிரிச்சால் அழற மாதிரி இருக்குடி!"

மாமா அத்தையைக் கேலி செய்வது அவளுக்கே சில சமயங்கள் கோபம் வரும். ஆனால் அத்தைக்கு அதுக்கெல்லாம் ஏன் ரோலம் வரவில்லை? அதெல்லாம் அத்தைக்கு யானைமேல் கொசுமாதிரி. கிழவரின் கீழ் வெட்டு அத்தைக்கு காதே கேட்டதோ யில்லையோ? வயசானாலே காது மந்தமாயிடுமாமே!

ஆனால் திடீர் என்று ஒரு நாள், அத்தை சம்பந்தமே இல்லாத சமயத்தில்:

"குந்தை, நாம்தான் பெரியவாள்" என்றார்.

அவளுக்குச் சட்டென்று புரியவில்லை.

"நம் ஸ்திரீ வர்க்கத்தைச் சொல்றேன். ஆண்கள்—தகப்பனிலிருந்து ஆம்படையான் உள்பட கைக் குழந்தை வரை—குழந்தைகள் செல்லக் குழந்தை, அசட்டுக் குழந்தை, பிடிவாதக் குழந்தை; நாம்தான் ஸஹிச்சுண்டு, தள்ளிண்டு போகணும் என்கிற பாடமாகத்தான் சிருஷ்டியிலேயே, தாய்மையின் பதவியை நமக்குக் கொடுத்திருக்கு. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைன்னு பழமொழி. ஆறடியானாலும் குழந்தைன்னு நான் சேத்துக்கறேன். அவா பேச்சில் நமக்குப் பிடிக்காததை நாம் காதிலேயே வாங்கிக் கொண்டால்தானே வம்பு? பெண்கள், சமயத்தில் கொஞ்சம் செவிடு, கொஞ்சம் குருடு, கொஞ்சம் மக்காயிருந்தால்தான் குடும்பமே நடக்கும்—ஆனால் கொஞ்சங் கொஞ்சந்தான், ஞாபகமிருக்கட்டும்—ரஸ்த்தில் கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டாப்போல. அதிகமாப் போனால் பச்சை வாசன—"

முகத்தில் ஆவியடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/479&oldid=1497690" இலிருந்து மீள்விக்கப்பட்டது