பக்கம்:அவள்.pdf/480

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


436 லா. ச. ராமாமிருதம் 'அத்தை, தயாராயிடுத்து, நைவேத்யம் பண்ணுங் கோளேன்-’’ வென்னிருள்ளிலிருந்து அத்தையின் குரல்: "நீயே. பண்ணு. நான் இன்னும் தயாராகல்லே-” "எனக்கென்ன அத்தை தெரியும்? மாமாவைப் பண்ணச் சொல்லுங்கோ.” சரிதான், அவர் காட்டற கையை நீ காட்ட முடியாதா? நீ பண்ணி வெச்சதைத்தானே அவா காட்டறா? அதை நீயே காட்டினால் ஆகாதா? காட்டு காட்டு.” இலையில் பொங்கலை வட்டித்ததும், அதிலிருந்து ஆவி பறக்கையில், முழிமுழியாய் முந்திரி அங்குமிங்கு மாய்த் தெரிகையில், அதுவும் பார்க்க ஒரு அழகாய்த் தானிருக்கு. மாமாவுக்கு வாய் ஊறி, எச்சில் இலை யிலேயே சொட்டிவிட்டது. நெஞ்சில் திடீரென ஒரு பரிதவிப்பு அலைமோதறது. (அத்தை சொன்னது இதுதானோ?) மாமா, நெய் பளபளக்கும் பக்கமாய், விரலால் வழித்து முகம் நிமிர்ந்து, வாயுள் விட்டுக்கொள்கிறார். பேஷ், பேஷ்! இத்துடன் ஒரு சட்னியோ, கத்தரிக் காய்ப் புளிப்பச்சடியோ இருக்கனுமாம், ஏர்வை எப்படி யிருக்கும் தெரியுமோ?" 'அது என்னதான் நெஞ்சீரலோ!’- கேட்டுக் கொண்டே அத்தை வருகிறார். புலிப் பாலைக் கொண்டு வாயேன், கறக்கறத்துக்கு முன்னாலே வரியை எண்ணினாயோன்னு ஏதாவது ஒரு. அடுதாசுக்குத்தான். எப்படித்தான் உங்களைத் திருப்திப் படுத்துவதோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/480&oldid=741857" இருந்து மீள்விக்கப்பட்டது