பக்கம்:அவள்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 437

அத்தை குளித்துவிட்டு ஈரப்புடவையுடன் வந்திருக்கிறார். பளிச்சுனு கம்பீரமாய், பொன்மலை மலையுச்சியினின்று நுரை கக்கிக்கொண்டு பெருகும் அருவிபோல் நரைக் கூந்தலின் சரிவு. அதுவும் பல் போனபின் இன்னும் ஒரு சுற்றுக் கூடப் பெருத்திருக்கார்.

அம்மா குதிர் போல;

அய்யா கதிர் போல,

ன்று—

சமையல் சற்றே முன்னே பின்னே ஆகலாம்? காலையில் மார்கழிப் பொங்கல் டிபனாயிடுத்து—என்று சொல்லிக்க வேண்டியதுதான்.

இதோ இப்படி அப்படி, அடுக்குள்ளுக்கும் உக்கிராண உள்ளுக்கும், கிணற்றடிக்கும் நாலு நடை ஆவதற்குள், வெய்யில் கூடத்துக்கு இறங்கிடறது. தாமரைக் கோலத்தைத் தொட என்னேரம்!

நேரம் ஆச்சோ இல்லையோ, வயிறு பசிக்கிறதோ இல்லையோ, சமையல் ஆச்சோ இல்லையோ!

"ஆச்சா? ஆச்சா??’’

என்று கேட்டுக்கொண்டே மாமா வந்துவிடுவார்.

"இதென்ன அக்ரமம்? என்னிக்கும் ஒரே அவசரம்தானா? குழந்தை ஒண்டியாத் திண்டாடறாளே என்கிற இரக்கம் கூடக் கிடையாதா?”

"வீட்டில் ரெண்டு பொம்மனாட்டிகள் இருந்துண்டு வருஷமா சமையல் ஆகிறதாம்! ஆனவரை போடுங்கோ. இரக்கமாம் இரக்கம். நீங்கள் பண்ணிப் போடுவதற்குள் நான் பிதுர்க்களுடன் சேர்ந்துவிடுவேன் போல இருக்கே. இப்போத்தான் சாதம். அப்புறம் எள்ளும் தண்ணியும் தாண்டி!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/481&oldid=1497693" இலிருந்து மீள்விக்கப்பட்டது