பக்கம்:அவள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446 லா. ச. ராமாமிருதம்

திடீரென என்னை மல்லாக்கப் புரட்டி இரு கைகள் இறுக அனைத்தன. நெஞ்சடியில் கல்விட்ட ஸ்தனங்கள் அமுங்கி விம்முகின்றன—திமிறத்திமிற வாயில் ஒரு முத்தம். உதட்டில் தணல் தீய்ந்தது.

அந்த ஆலிங்கனத்தினின்று விடுவித்துக் கொண்டு அறையினின்று வெளியேறி, மொட்டை மாடியில் குட்டித் திண்ணையில் குந்தி, நெற்றிப் பொட்டை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டேன். மண்டை திகுதிகுவென எரிந்தது.

'எல்லாம் நல்லதுதான்.'

மூடுசூளை யில்லாவிட்டால் அம்மா அம்மாயில்லை.

ஆனால் இப்படித்தான் சொல்லணும போலும்;

"நேர வேண்டியதுதான் நேர்ந்திருக்கு.'

ஆனால், எதுவுமே, தான் நேர்ந்ததுடன் நில்லாது. அதே சமயத்தில் எல்லோருக்கும் தனித்தனியாய் வேறு நேரும் இத் தனித்தனி மயத்தின் தன்மை யாது? ஒரே சம்பவத்தில் யாரும் எப்படிப் பாதிக்கப்பட்டவர்களாகிறோம்?

ஆனால், இதுவும் தெரியாமல் இல்லை உயிருக்கு உயிர் உடல் இரண்டும் ஒருப்பட்டு கருவுற்று உருப்பெற்று முழுப்பட்டதும் வெளிப்பட்டு, யுகம் யுகமாய் நேர்ந்து நேர்ந்து வடுப்பட்ட உண்மைதானே இப்பவும் நேர்ந்து விட்டது! ஆயினும் எனக்கென்று ஏற்பட்டது எனக்கேன் பழகிப் போகவில்லை? என் பத்திரம் எப்படித் திடீரென்று என்னின்று கழன்றுவிட்டது? அது போனால்தான் போகட்டுமே என்று ஏன் மனம் சமாதானமடைய முடியவில்லை?

ஆனால் ஸ் தி ரீ க ள் எப்படியோ, இப்படித் தங்களுக்கு நேர்வதை சடுதியில் ஏற்றுக்கொண்டு விடு கிறார்கள். இதை வரவேற்கிறார்கள். இல்லாவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/490&oldid=1497713" இலிருந்து மீள்விக்கப்பட்டது