பக்கம்:அவள்.pdf/492

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


448 லா. ச. ராமாமிருதம் உலகம் ஒரு உண்மை; ஆயினும், அதன் தனித் தனி நியாயம் வெவ்வேறு. இதோ கூரையுச்சியில் பூனை தன் வாயை நக்கிக் கொண்டு செல்கின்றது, உலகம் தெரிந்து ரகஸ்யமாய், எதையோ திருடித் தின்றுவிட்டு, திருப்தியாய். ஆனால் இதேபோல் காட்டிலோ கூட்டிலோ புலி தன் வாயை நக்கிக்கொண்டு நடந்தால் இப்படிச் சொல்வோமோ? புலிப்பசி ஒயாப்பசி என்று புழுங்குவோம். என் திகைப்பு, என் பசி என்னவென்று புரியாமலே தவிக்கிறேன். எனக்கு என் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால்: 'நேர வேண்டியதுதான் நேர்ந்திருக்கு.” நேற்று 宰 永 孪 கேற்றையப் போலிருக்கு ஆனால் நேற்றைக்கின்னிக்குத் தழைஞ்சுட்டாள். ஆனால் சளைக்கல்லே. தான் சுமப்பது தன்னோடு இன்னொரு உயிர்ணு காட்டிக்காமல, தூக்குவது தண்ணிர்க் குடம்போல் தன் னால் முடிந்தவரை, முடியாதபோதும் சுறுசுறுப்பாய் வளையவராள். இதில் எம்மட்டு வீறாப்பு, எந்த அளவுக்கு சஹிப்புன்னு தெரியாதபடி என்னையும் ஏமாத்தப் பாக்கறாள். ஆனால் கிணத்தடியில் அவள் விட்டுச் செல்லும் அடிச் சுவடில் நாளுக்கு நாள் கன அழுத்தம் எனக்குச் சொல்றதே! மாதம் அஞ்சுக்கு வயிறு பெரிசு, பிறக்கப் போறது பெண்தானோ என்னவோ? குனிஞ்சால் ஒரு இறைப்பு. நிமிர்ந்தால் ஒரு மேல் மூச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/492&oldid=741870" இருந்து மீள்விக்கப்பட்டது