பக்கம்:அவள்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450லா. ச. ராமாமிருதம்



யத்தில், தாயும் குழந்தையுமா திரும்பி வரப்போறாள் என்கிறதை நினைச்சுப் பாக்கறபோது நெஞ்சு உடம்பு கொள்ளல்லே.

மனமறிஞ்சு, இதம் தெரிஞ்சு நடக்கறதுங்கறது. வரப்ரசாதம்தான். வந்த புதுசில், பழகறதுங்கறது பாசாங்கில் ஆரம்பிச்சாலும் பாசத்தில் முடியறப்போ, அதில் சம்பந்தப்பட்டவாளின் பாக்கியமும் கலக்காமல் மந்திரத்தில் விழற மாங்காய் ஆயிடுமா அது?
நேற்று--
நான் என்னவோ எனக்கு நினைப்புக்கு வர வேளையெல்லாம் நேற்று நேற்று என்கிறேன். அது நேற்றோ இன்னிக்கோ? எனக்கு சிரிப்புகூட வரது.

நேற்று பாதிராத்திரி; மாடியிலிருந்து இறங்கிவந்து, நான் தூங்கிப்போயிட்டேன்னு நினைச்சுண்டு, என் கால் மாட்டில் கிடந்த போர்வையை விரிச்சு என் மேல் போர்த்திவிட்டுப் போனாளே, அது பாசத்தினால் இல்லை, வேஷக்காரியம்னு மலையாட்டம் மாரிலே கையை வெச்சிண்டு நான் மனமாரச் சொல்ல முடியுமோ? அப்படியே சொன்னாலும், அப்படிச் சொல்ற நாக்குக்கு நரம்பில்லையானாலும் உடலுக்கு முன்னால் மார்'பட்டு’னு வெடிச்சுடாதா! எதற்காகக் கீழிறங்கி வந்தாளோ அந்நேரம் குட்டி எனக்காகத்தானே வந்தாள் என்று நினைக்க நினைக்க மார் சுரக்கும்போல் தவிக்கிறது.

'அத்தை நீங்கள் ஏன் இப்படி சபலத்தில் அவஸ்தைப் படறேள்? மசக்கைன்னு எனக்குத் தனியா இதைத் தன்கணும் அதைத் தின்கணும்னு ஆசை தோணல்லே நம் ஆத்துலே ஒண்ணேனும் குறைவாயிருந்தால்தானே! ஆனால் நீங்கள் கேக்கறதுனாலே தோணறது, ஒரே ஒரு ஆசை, சின்ன ஆசைதான். கொஞ்ச நாளாவே நேர்ந்துக்கிறதில்லே. உங்களுக்கு சிரமமில்லாட்டா, எனக்கு ராவேளை நீங்களே சாதம் போடுவேளா? நானே போட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/494&oldid=1497680" இலிருந்து மீள்விக்கப்பட்டது