பக்கம்:அவள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464 லா. ச. ராமாமிருதம்



'அதுதான் தெரியல்லியே! ஆனால் என்னவோ சொல்லத்தான் வந்திருக்கார். அதுக்குள் சொல்லலாமா வேண்டாமா-ரெண்டு மனசு போலவோ? ‘உமா செளக்கியமா'ன்னு கேட்டேன். ஏதோ ஒண்னு ஆரம்பிக்கணுமே! ஏன், அவள் இங்கே வந்துண்டு போயுண்டு தானே இருக்காள். அவள் செளக்கியம் உங்களுக்குத் தெரியாதா?ன்னார். இடக்கன். நேர்க்கேள்விக்கு நேர்ப் பதில் சொல்லிட்டுப் போகட்டுமே... ஆனால் வம்பு அடிக்கற ஆளுமில்லே. யோசனை பண்ணிப்பண்ணி மண்டையைக் குடையறது.'

அப்படியா? எனக்குப் புதுசாயிருக்கே! பேச்சுன்னா அலைவையே!”

'உமா, நீ இன்னும் கொஞ்சம் மரியாதையாயிருக்கலாம்னு உனக்குத் தோணல்லே?"

“எல்லாரும் பிறத்தியாருக்குத்தான் வாத்தியாரம்மா!'

'உமா, சற்றே நிதானத்தில் இரு. உன் சுபாவம் எனக்குத் தெரியும்னாலும் அவரிடமும் இப்படித்தான் நடந்து இருப்பாயா?”

'இது என்ன பயமுறுத்தல்?’ எனக்குக் கோபமாயும் இருந்தது. பீதியாவும் இருந்தது. அப்பா இருந்த நாளில், அவர் உத்தியோக முறையில், “Witness Turned Hostile' என்பார். அதுமாதிரியா ஏதேனும்...

'நான் என்ன பயமுறுத்தி, நீ உக்கிராண உள்ளே ஒளிஞ்சுக்கறது?' அம்மா சிரிச்சாலும் அவள் புருவ நெரிசல் இன்னும் நீவவில்லை. கூடவே சீண்டிவிட்டேனோ?

“என்னவோ குருவித்தத்தல் மாதரி, முன்னுக்குப்பின் தாக்கல் மோக்கல் இல்லாமல் பேச்சு தாவிண்டே போச்சு. ரொம்பநாள் கழிச்சு சந்திக்கிறோம். பேச்சு சகஜமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/508&oldid=1497657" இலிருந்து மீள்விக்கப்பட்டது