பக்கம்:அவள்.pdf/509

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாயம் 龛台莎 வரதா? அதுவும் மாமியாரும் மாப்பிள்ளையும் நான் என் அமரிக்கையில் கதவு மூலையில் நின்னுண்டு பேச, அவர் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கார். பேச்சுவாக்கில் சொன்னார்: "நான் நாலு தங்கைகளோடு பிறந்தேன். உங்கள் வீட்டில் நாலு உடன்பிறந்தார், நடுவில் ஒரு பெண்-இரண்டுக்கும் வித்தியாசம் இருக்காதா? "தாராளமா'ன்னேன் பதிலுக்கு. அவள் இன்னும், அப்படித்தான் இருக்காள்..." எனக்கு சுருக்'குன்னுது. ஆமா, இத்தனை வருஷம் கழிச்சு, நான் உமாவைப் பத்திச் சொல்லி, நீங்கள் புது சாகத் தெரிஞ்சுக்க என்ன இருக்கப் போறது? இந்த வார்த்தை எப்படி, எந்த சம்பந்தத்தில் என் வாயிலிருந்து வந்ததுன்னு எனக்கே தெரியல்லே. நான் இப்படிச் சொன்னதும் அவர் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தார். ஏதேனும் தப்பிதமாய் பேசிட்டேனோ? எனக்கு 'திக்'குன்னு ஆயிடுத்து. 'லக்ஷத்தில் ஒரு வார்த்தை. நான் ஏதோ யோசனை கேட்க வந்தேன். நீங்கள் உபதேசமே பண்ணிட்டேள்! வரேன்." கிர்ர்’னு எழுந்து போயிட்டார். புதுப்பால் வந்தாச்சு, டிகாக்ஷன் இறங்கிண்டிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லத் தோணல்லே. நேரமேயில்லை... நான் வாசலுக்கு வரதுக்குள், அவர் முனை திரும்பிட் டார். ஆமாம்; உங்களுக்குள் என்னடி, உமா?” 'என்னவாம் என்ன? எலிக்கு ஜட்டி கட்டல்லே, குழாயில் தண்ணி சொட்டறது, செம்பருத்திப் பூவைப் பறிக்காமலே தரையிலே உதிர்ந்து கிடக்கு"ன்னு வேடிக்கை பேசற மாதிரி மழுப்பிட்டு-ரொம்ப நேரம் தங்கல்லே- உடனேயே கிளம்பிட்டேன். இருந்தால் பிடுங்கியெடுத்துடுவாள். அ.-30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/509&oldid=741889" இருந்து மீள்விக்கப்பட்டது