பக்கம்:அவள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அம்மா 7 இத்தனை அருமையாக நான் பிறந்தபோதிலும், அம்மாவிடம் தனிக் கொஞ்சல்கள் சலுகைகள் நான் அனுபவித்ததாக அந்தச் சின்ன வயது முதற்கொண்டே ஞாபகம் இல்லை. -பள்ளி விட்டு வந்ததும், ஸ்லேட்டையும் புத்தகங் களையும் வீசியெறிந்துவிட்டு அம்மா மடியில் விழுந்ததாவோ, -'அடி கண்னே! படிச்சுக் களைச்சுப் போயிட் டியா?' என்று அவள் என்னை வாரிக்கொண்டதாவோ, -சாதத்தைப் பிசைந்து எங்களுக்கு கையில் போட்ட தாவோ, - - என்ன குழந்தையை இப்படிப் போட்டு அடிக் கறேளே! என்று எனக்குப் பரிந்துகொண்டு வந்ததாவோ, -'நீ சமர்த்து, கெட்டிக்காரன்” என்று என்னை நேரில் பாராட்டினதாவோ, -பிறரிடம் பெருமைப்பட்டுக் கொண்டதாவோ, ஊஹாம்... அதற்கெல்லாம் பாட்டிதான் சரி. வீட்டுக்குப் பாட்டி கட்டாயம் வேணும். ஆனால் அம்மா, பாட்டியான பிறகும், பாட்டியாக இல்லை. எனக்கு ஆச்சரியமாயிருக்கும், ஏமாற்றமா யிருக்கும், ஆத்திரம் வரும். ஆனால்ஆ, இது எனக்கு மிக்கப் பிடித்தமான சொல். சொன்ன புத்திகள், போதித்த கோட்பாடுகள், அச் சுறுத்திய கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற் றையும் ஒரே கணத்தில் தூக்கியெறிந்து, கலகத்துக்குக் கொடி நாட்டும் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/51&oldid=741890" இருந்து மீள்விக்கப்பட்டது