பக்கம்:அவள்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466 லா. ச. ராமாமிருதம்



ஓஹோ, என்னை முந்திண்டுட்டாரா? மாமியாரை மத்தியஸ்துக்கு. No...No மாட்டவே மாட்டார். அந்த அளவுக்கு அவரை எனக்குத் தெரியாதா? ஆனால் நானும் மெனக்கெட்டு, இதே காரியமாத்தானே இன்னிக்கு இங்கே வந்தேன்! ஆனாலும் இன்னதுதான் நடந்ததுன்னு விரல் வெச்சு சொல்லிக்கற மாதிரி ஒண்னும் கிடைக்கல்வியே? குணங்களின் மோதல்னா உருக் கிடைக்காமல் இப்படித் தான் இருத்குமோ?

இதெல்லாம் அடிப்படையில் எப்போ, எங்கே ஆரம்பிச்சுது? நினைவை முட்டிமுட்டிப் பார்த்துக்கறேன். நூல்நுனி கிடைச்சால்தானே இழுக்கலாம்! இழுத்தால் தானே சிக்கு வழி பிரியும் எவ்வளவு பெரிய சிக்கு ஆயிடுத்து? இனி பிரிஞ்சவரைக்கும்தானோ? ஒண்ணு , இருக்கிற முடிச்சோடு சமாளிக்கப் பார்க்கணும். இல்லை, இந்த இடத்தோடு வெட்டி எறியனும். வெட்டி எறியறதா? அப்புறம் மிச்சமே என்ன இருக்கப்போதது? அம்மாடி, பயமாயிருக்கே! இனிமேல் அலியாவது, நுனியாவது?

Be honest with yourself—நான் காலேஜ் படிச்சேன் என்பதற்காக, இது ஒரு கோட்பாடின் உச்சரிப்பாய்க் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதையே நான் மனசாட்சியின் குரல்னு சொல்லிக்கொள்ள முடியுமா? இதனால் நான் புதுமைப்பெண் ஆகிவிடுவேனா?

எங்கள் இடையே பேச்சு அனேகமா அறுந்து போச்சு. அவர் காரியத்தை அவர் பார்த்துக்கறார். என் காரியத்தை நான். எனக்குச் செளகரியப்பட்டபடி. ஆமாம்; அது அதுக்கு அதனதன் வேலைன்னு. அவருடைய கட்டுப்பாடு ஒழுங்கெல்லாம் என் சுபாவத்துக்கு ஒத்துவர சமாச்சாரமில்லே. அவர் துணியை அவரே தோய்ச்சுக்கறார். அவருடைய சமையலை அவரே பண்ணிக்கறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/510&oldid=1497650" இலிருந்து மீள்விக்கப்பட்டது