பக்கம்:அவள்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468 லா. ச. ராமாமிருதம்



ஆனால் அசல் என்னவோ அரட்டை தான்! கொள்ளைப் பசி. ஏதேனும் எனக்காகப் பொங்கித் தொலைச்சுக்கணும்-காரியம்னாலே வெறுப்பாயிருக்கு.

உள்ளே நுழைஞ்சதும் சமையலறையிலிருந்து வெளிப்பட்டு என்னிடம் ஒரு தம்ளரை நீட்டினார்.

Hot சேமியா பாயஸம், முந்திரிப் பருப்பு முழுசா, குங்குமப்பூ-ஆமாம் மிதந்துண்டு-நெய் சுமா கமாளிக்கறது.

ருசிச்சேன். 'H-im-Tops... ரொம்ப தாங்க்ஸ். இன்னிக்கு என்ன விசேஷமோ?"

ஒரு Celebration. இன்னியோடு 52 வாரம் பூர்த்தி, Not Out...”

எனக்குத் 'திக்' குன்னது. அத்தனை நாள் ஆயிடுத்தா?

ஒரே நிமிஷத்தில் தேவாமிர்தத்தையே விஷமாக்க உங்களால்தான் முடியும்!" என்றேன்.

கசப்பது பாயஸம் அல்ல. என் எண்ணமும் அல்ல. ஒருவேளை, உனக்குப் படும் யதார்த்தமோ என்னவோ? உனக்கு அப்படித் தோன்றினால், குடிப்பதோ-தொட்டி முற்றத்தில் கொட்டுவதோ உன் இஷ்டம்தானே'

கோபமே தெரியாத Matter of fact voice!

இந்த மனுஷனுடன் ரோசம் கட்டுப்படி ஆகாது. ஆனால் கோபம் மட்டும் இருக்கு. ஒரு பக்கம் ருசி பிடிச்சிழுக்கறது. பசியோ பிராணன் போறது. எதிரே குடிக்காமல் எடுத்துண்டு உள்ளே போயிட்டேன்.

ரவி :
தாரகராமன் ஸார் ஒரு நேர்த்தியான மனுஷன். நான் சொல்கிறேன்--A Real Son of a Gun– அவர் இல்லாது இப்போ எவ்வளவு கஷ்டமாயிருக்கு. இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/512&oldid=1497644" இலிருந்து மீள்விக்கப்பட்டது