பக்கம்:அவள்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 469

வரை அவர் ஸீனியர், அவரிடம் நான் ஜூனியர் என்றா பழகினோம்? எங்கள் வரை நாங்கள் எப்பவும் Chums தான். இப்போது இருந்தால் தாட்சண்யம் இல்லாமல் நியாயம் சொல்லக்கூடிய மனுஷன் அவர் ஒருத்தர் தான். ஆனால் நானும் வேறு யாரை அறிவேன்?

வரவர என் நெஞ்சுள் தினம் ஒரு கோர்ட் நடக்கிறது. நானே நடத்தும் எதிர்த்தரப்பு வாதத்தில் அவர் குரலைத் தேடுகிறேன்.

புருஷன், மனைவிக்கு இடையே-No Thank you D - the Divorce Laws. ரவி, நீ ஒண்னு கவனித்திருப்பாய். நான் Divorce Cases எடுத்துக்கறதில்லே. சமாதானமாப் போவையோ வெட்டி மடிவையோ-உங்கள் பாடு: மத்யஸ்தத்துக்குக்கூட என்னிடம் வராதீர்கள், எல்லாமே பரம ஒற்றுமையா அமைஞ்சுடறதா? ராமனுக்கும் சீதைக்குமே ஒற்றுமையில்லே என்கிறேன்...அதற்கு என்ன சொல்லப் போறே?

'அப்படி முழு ஒற்றுமை அமையவும் கூடாது. தராசு ஆடிண்டேயிருக்கணும். அதுதான் வாழ்க்கை. விவாகரத்து சட்டம் இருக்கிறது என்பதனாலே-அக்கினி சாக்ஷி, அம்மி மிதிக்கறது, அருந்ததி பார்க்கறது எல்லாத்துக்கம் அப்புறம் என்ன அர்த்தம் இருக்கிறது ஐயா? ஒவ்வொன்றாய் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லிக் காட்டுபவர் சொல்லட்டும்...அவர்கள் வழக்கெடுத்துக்கொண்டு இந்த மடிசஞ்சி பிராம்மணனிடம் வர வேண்டாம்!

'கல்யாணம் அவசியம், அத்தியாவசிம்கூட. ஆனால் கல்யாணம் ஒரு ஏற்பாடு. அவ்வளவுதான்! சமுதாயத்தின் சத்திய ஏற்பாடு. Marriages are not love Heaven. So, do not fall in love with your wife, அதேசமயம் அவளுக்குத் துரோகம் பண்ணாதே. அதுதான் நான் சொல்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/513&oldid=1497642" இலிருந்து மீள்விக்கப்பட்டது