பக்கம்:அவள்.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


470 லா. ச. ராமாமிருதம் There is love. ஆனால் அது ஒரு சக்தி. அது பலத்தைத் தான் தருமோ அழிக்கத்தான் அழிக்குமோ அறியேன். ஆனால் உறவுக்கு அது ஒத்ததல்ல...' கோர்ட்டில் வழக்காடும்போதுகூட இதுபோலத்தான் ஒரு மாதிரியா, லெடுக்கு வெடுக்கெனப் பேசுவார், பாலிஷ் இல்லாததுபோல். ஆனால் சட்டத்தில் நிபுணன். Approach, Argument, Summing up aráðm Gao g;arg அருக்கம். இதில் சத்து இவ்வளவுதான். மிச்சம் எல்லாம் சுத்தி வளைச்ச வெட்டிச்பேச்சு என்கிற மாதிரி, Cut and right ஆக இருந்ததனாலேயே அவரிடம் கேஸ்கள் குவிஞ்சு கிடந்தன என்று சொல்லும்படியில்லை. "Ch 1 got along! அவர் வண்டியும் நன்றாய்த்தான் ஓடிக் காண்டிருந்தது. Company Lawவில் அவரை மிஞ்சக் கிடையாது. - ஒருநாள்-ஒருநாள் என்ன, எனக்கு அது அந்தநாள், அவர் சேம்பர் வில் 'இன்று மாலை நானும் மாமியும் உன் வீட்டுக்கு வர தாயிருக்கோம். Ch.1 know-நீ முழிக்க வேண்டாம். உன் தாயார் invalid-cதான் சமைக்கிறாய், அவளுக்கு வேண்டியதையெல்லாம் நீதான் பண்ணுகிறாய் என்று தெரியும். நீ ஒரு சிரமமும் படாதே. நாங்கள் சம்பந்தம் பேச வரோம். இந்தப் பெண் பார்க்கும் படலத்தைக் கட் பண்றேன். நீதான் உமாவைப் பார்த்திருக்கையே?’’ பார்த்திருக்கிறேனா! அடுத்து என் தோள்மேல் கை வைத்துக்கொண்டு கண்சிமிட்டியபடி, 'ரவிச்சந்தர். இது உனக்கும் எனக்கும் இடையே. They think you are a fine catch. And you are, you know! உன் தங்கைகளைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/514&oldid=741895" இருந்து மீள்விக்கப்பட்டது