பக்கம்:அவள்.pdf/520

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


476 லா. ச. ராமாமிருதம் தில் நான் இன்னும் ஆதரவாக இருந்திருக்கலாமோன்னு இப்போ தோண்றது. ஆனால் வியாதியஸ்தாளைக் கவனிக்கறது படு oேre. நீ ஒருநாள் படுக்கமாட்டியா. உனக்கு ஒருத்தர் செஞ்சாக வேண்டாமா? என்கிற கேள்வி எனக்கே தெரியறது. அதென்னவோ சொல்லத் தெரியல்லே. சொல்லத் தெரியாமல் இல்லை. உன்னையே நீ ஏமாத் திக்கறே... இந்த வயசில் நீ இப்படி சொல்லிண்டால் யாருமே சிரிப்பா. இது என்ன தெரியுமா? பிறரைப் பற்றியே எண்ணம் இல்லாத அப்பட்ட சுயநலம். அம்மாவின் கடைசி சமயத்தில் நான் பக்கத்தில் இல்லை. அவர் தான் ஒருவாரமா, அம்மாவின் படுக்கை பண்டை விட்டு அசையாமல், அன்ன ஆகாரம் கூட w * மறந்துட்டு... தற்செயலா அன்னிக்கு மயிலாப்பூர் போயிட்டேன். ஆமாம்; தினமும்தான் அம்மாவுக்கு அப்படியிருக்கு. அதற் காக காரியங்கள் நின்னுட முடியுமா? அங்கேகூடக் கேட்டா: என்ன டி. இந்த சமயத்தில் நீ அங்கே தானே இருக்கணும்? நான் ஒன்றும் பதில் பேசல்லே. மறுநாள் காலையே ஆள் வந்துட்டான். வீட்டில் மத்தவாளோடு சேர்ந்துதான் போனேன். எனக்குப் பிணம்னாலே பயம். ஆனால் இதை இவா கிட்ட கூட என்ன சொல்லிக்க முடியும்...இந்த உண்மைக் காரணத்தை? 歇 辜 率 அவர் எதுவுமே என்னைக் கேட்டுக்கல்லெ. அதுவே குத்திப் பிடுங்கறது. பாவி, ரெண்டு அடிவேனும்னா என்னை அடிச்சுடேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/520&oldid=741902" இருந்து மீள்விக்கப்பட்டது