பக்கம்:அவள்.pdf/534

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


金9) லா. ச. ராமாமிருதம் இல்லாமல்படிக்கு? என்னதான் காம் பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு வீவு வாங்கிக்கொண்டு திரும்: வர முடியாதா? ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குந்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங் களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம் பார்க்கப் போனால் யார்தான் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப்போல் இருக்கிற வர்கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக் கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக்கொண்டிருக் கிறோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் ஏங்கி உருகித் தவித்துக்கொண்டு: உத்தியோகத்தை உதறிவிட்டு ஒடி வந்துவிட முடிகிறதா? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. மனஸ் வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனஸ் வெச்சிருக்கேன்! ஆனால் அதற்காக என்னோடு பேசக்கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, 'ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?’ என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவிவிடுவார்களா? அதையும்தான் பார்த்துவிடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தைகூட பேசிக்கக்கூடாது என்றால் பிள்ளைகள் கலியாணம் பண்ணிக்கொள் வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெடகம் கெட்டவர்களாகி விடுகிறோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/534&oldid=741917" இருந்து மீள்விக்கப்பட்டது