பக்கம்:அவள்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 497

"இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?'

அம்மாவுக்கு உள்ளுறச் சந்தோஷந்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டார். "அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்தூட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயன்; அவளுக்குக் காலேஜ் குமாரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு... நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமாயிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம், நான் வாயைப் பிளந்தேன்னா முதன் முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள் தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப்போறேள்?'

"இல்லேம்மா; நாங்கள் நீங்கள் சொன்னத்தைக் கேட்கறோம்மா...' என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம்.

"ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள்-ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகனும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரை மணி நேரம் அதிகம் தூங்கறேள்."

எங்களுக்கு ரோஸ்மாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்னும் சொல்ல

அ.-32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/541&oldid=1497377" இலிருந்து மீள்விக்கப்பட்டது