பக்கம்:அவள்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 499

"எனக்குக் காது கேட்கல்லையே' என்றுவிடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத தெரியாதா என்ன?

உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு, காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து "என்னம்மா பண்ணியிருக்கே?" என்று வாணாயிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்குக் கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படியிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை செல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறுசுகள், பெரிசுகள் விதவிதங்களினிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?

ஒரொரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் அஞ்சுபேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா, சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள்,...... ...இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை. பந்திகள். ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்றுகொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம்! தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/543&oldid=1497360" இலிருந்து மீள்விக்கப்பட்டது