பக்கம்:அவள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்மா
21அம்மா, நான் அறிந்த அவள் இளமையிலேயே சற்றுக் கொழ கொழவென்று இருப்பாள். சந்தனச் சிவப்பு.

வெள்ளைப் பசு.

நாளடைவில், கூந்தலின் கறுகறு, சாம்பல் நிறமாக மாறி, அது அலை நுரையாகி, மஞ்சள் பூத்து, சமுதாயம் நெற்றியில் அழித்துவிட்டாலும், பிறவியின் மங்கலம் தழைத்து, வாழ்க்கையின் அடிமேல் அடிக்கு வைத்த பெயர் அனுபவம் மேல் பூத்த புற்றினுள், தன் விரக்தியின் தனிமையில் வீற்றிருந்தாள்.

விரக்தியா? வீம்பா?

அம்மா பெயர் ஸ்ரீமதி.

வாழ்க்கையில் அம்மா ரொம்ப அனுபவித்துவிட்டாள். சின்ன வயதிலேயே பெற்றோர்களை இழந்து, திருமணமான பின், பங்களுரில் குடித்தனம் பண்ணுகையில் ஒரே வார இடைவெளியில் தம்பிகள் இருவரையும் ப்ளேக்கில் இழந்து அம்மாவும் அண்ணாவும் கோடைவிடுமுறைக்குச் சென்னைக்கு வந்திருத்த சமயத்தில், அண்ணா திடீரென்று இறந்துபோனார்.

அந்த வாரத்துக்குள்ளேயே, வீட்டு மாப்பிள்ளை, ஜுரத்தில்.

அம்மா கிராமத்துக்குத் திரும்பவேயில்லை. பிள்ளை களுடன் தங்கிவிட்டாள்.

சில வருடங்கள். இன்னொரு பெண்ணை ஜுரத்தில் இழந்தாள்.

அடுத்த வருடம், என் தம்பி, மாரடைப்பில். குடும்பத்தின் தூண்

”ஆண்டவனே, உனக்குக் கண் இல்லையா?” கதறுகிறோம். துடிக்கிறோம். தூற்றுகிறோம். அடுத்தே ”விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/55&oldid=498027" இருந்து மீள்விக்கப்பட்டது