பக்கம்:அவள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவள் 盛š துரக்கம் திடீரென்று வந்த மாதிரியே விழிப்பும் வெடுக்கென வந்தது. பையன்கள் இன்னும் வரல்லே? கண், சுவர்க் கடியாரத்தின் மேல் சென்றது. மணி ஒண்ணு. அவர்கள் திரும்ப இன்னும் அரைமணி ஆகும், இதுபோல் நான் துரங்கியதில்லை. கனவற்ற ஆழ்ந்த நித்திரை. ஒடும் ஜலத்தில் குளித்தெழுந்தார் போன்ற புத்துணர்ச்சி. பார்வையில் கூடச் சதை உரித்தாற் போன்று ஒரு தெளிவு, சுத்தம், பளிச் ஜன்னல் கம்பி களின் வழி வடிகட்டினாற் போன்று உள்விழுந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் அறைச் சுவர்கள், பூவிதழ் ம்ருதுவில் குளுமையுடன் 3-2 யில் பிதுங்கின. உவமை உருவகமாகிவிட்ட கவித்வம் கமழ்நிலை. கண்கள் தாமே மூடிக்கொண்டன. மறுபடியும் துரக்கத்துக்குத் திரும்ப இல்லை. சொல்லத் தெரியாத உள் ருசியின் சுகத்தில் எஃகுத் தந்தியில் உச்சஸ்வரம்ஸ்வரம்கூட இல்லை, அதிலும் ஒரு துளித்வனி நாத மண்டலத்தையும் தாண்டி மோனத்துள் பிரவேசிக்கப் போம் விளிம்பு நிலை-இந்த அனுபவத்தின் சூக்டிமத்தை விவரிக்கும் முயற்சியில் சொல்லே தன் தந்தி அறுந்துவிடும் போல் விதிர் விதிர்க்கிறது. இது தடமே வேறு. திடீரென லால்குடியில் அம்மன் சன்னிதியில் கர்ப்பக் ருஹத்தில் அம்பாளுக்கு மிகக் கிட்ட நிற்கிறேன். குருக்கள் இருந்தால் அனுமதிக்கமாட்டார். அத்தனை கிட் ட. இப்பவும் மூக்கு, முழி தனித்தனி தெரியவில்லை. ஒரே கறுப்புப் பூச்சுதான். ஆரஞ்சு பட்டுப்புடவை உடுத்தி யிருக்கிறது. அப்போது அவள் வயிறு பாகத்திலிருந்து ஆள்கள் புறப்படுகிறார்கள். அண்ணா. அம்மா. என் தம்பி, தங்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/67&oldid=741953" இருந்து மீள்விக்கப்பட்டது