பக்கம்:அவள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவள்-; சங்கு புஷ்பம் கொஞ்ச காலமாக அனத்தநாராயணன் எனும் ஒர் இளைஞர் என்னைப் பார்க்க வருகிறார் தனக் கென்று தனி அபிப்ராயம் கொண்டவர்தான். மிக மிக என்னைக் காட்டிலும் நாணயத்தின் மறுபக்கத்தைத் தெரிந்திருப்பவர். (இந்தக் காலத்து இளைஞர்கள் எங்களை அனுபவத்தில் மிஞ்சிவிடுகிறார்கள். அவசர யுகம் அல்லவா!) ஆயினும் பல சமயங்களில் எங்கள் ஸ்ருதிகள் இணைகின்றன. சில இடங்களில் த்வனிகள் கூடச் சந்திக்கின்றன. முன் கதையில், (கதை ஏது? சொந்த அனுபவம்} எனக்கு நேர்ந்த கனவை அவரிடம் சொன்னபோது, அவர் சொன்னது என்ன தெரியுமா? “At that moment you had entered the World of Innocence” si st. gy. எனக்குச் சற்றுத் திக்’கேன்று ஆகிவிட்டது. "ஒரு சாத்யமில்லாத நிலையைச் சொல்கிறாய்" என்றேன். "ஏன் சாத்யமில்லை? உங்கள் பாஷையிலேயே அவரவர் பூத்ததற்குத் தக்கபடி நீங்கள் கண்டது உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/69&oldid=741955" இருந்து மீள்விக்கப்பட்டது