பக்கம்:அவள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கு புஷ்பம் 27 வலிக்கிறது. பாம்பு வயதாக ஆக, உடல் குறுகி, விஷம் கூடி, மண்டையில் மாணிக்கம் அப்பதான் உண்டாகிறது. பாம்பு மண்டையில் மாணிக்கம் சர்ச்சைக்குரிய விஷயமா யிருக்கலாம்; கட்டுக்கதையாகத் தோன்றலாம். ஆனால் கதையில்லாமல் வாழ்க்கையே இலலை, முடியாது. தாத்பர்யம் பார்க்கையில், தியானத்தின் பாதையும் இதுதானே! எண்ணங்களைப் படிப்படியாக அடக்கி, ஒவ்வொன்றாய் விலக்கி, ஒரே எண்ணமாய் முகப்படுத்திஇதுவன்றி தியானம்! யாது? சுலபமாகச் சொல்லிவிட்டேன். ஆனால் செயல்பாடில் ஓர் இம்மிகூட முன் நகர முடியவில்லை. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தாலே ஒழிய, எஞ்சியிருக்கும் இந்த ஆயுசில் தியானத்துக்கு எ ன க் த க் கொடுப்பனை கிடையாது எனத் தெரிந்துவிட்டது. தியான நிலை கிடைத்துவிடும் என்று நான் தினைப்பதே என் அறியாமை யின் திமிர். எனக்குக் கிடைக்காததால் தியானம் கட்டுக் கதையாகிவிடுமா? நம் காலத்திலேயே வாழ்ந்த பகவான் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் இவர்களை மறுத்துவிட முடியுமா? ஸங்கீத மும்மூர்த்திகளும் அப்படித் தானே! ஸங்கீத யோகிகள். 'உன் முழு மூச்சுடன் நீ தேடினால், மூன்று நாள் களில் உனக்குத் தெய்வம் சித்தி' என்து ராமகிருஷ்ணர் அடித்துக் கூறுகிறார். இவர்கள் எல்லோரும் இன்னும் கதையாகிவிடவில்லை. 'முயற்சி செய்! செய்! செய்துகொண்டேயிரு! தோற்றுப்போனால், உன் தோல்வியை என்னிடம் கொண்டு வா!' - இது கீதாசார்யனின் உரையென்று அந்நாள் த்ரிவேணி ஆங்கிலக் காலாண்டுப் பத்திரிகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/71&oldid=741958" இருந்து மீள்விக்கப்பட்டது