பக்கம்:அவள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கு புஷ்பம் 2岛 ஒரு தண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். குழந்தை யைக் கொண்டுவந்து மடியில் வைத்தார்கள். வேற்று முகமில்லை. என் கன்னத்தைத் தொட்டுச் சிரித்தது. "என்ன?' என்று அதன் மோவாயைப் பிடித்துக் கொஞ்சினேன். 'நா-நா- என்றது, தன் மார்மீது சுட்டுவிரலால் தொட்டுக்கொண்டு என்ன என்று கேட்டது, அதற்கு அடி எடுத்துக் கொடுத்தமாதிரி ஆகிவிட்டது, "நா-நா ஜொள் கொட்டி மார் பை நனைக்கிறது. முன்மயிர் அடையாய் நெற்றியில் விழுந்து கண்ணைக் குத்துகிறது. மார்பில் விரலை அழுத்திக்கொண்டு, நா-நா-' தன்னை ஸ்தாபித்துக்கொள்ள அது படும் அவஸ்தையைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. உடனே ஆச்சர்யமாக இருந்தது. 'கடவுள் தன்னைத்தானே சிருஷ்டித்துக்கொண்டார்’ எனும் கூற்று லேசாகப் புரிகிற மாதிரியிருத்தது. அதை விட அந்தத் தாக்கம் பெரிதாயிருந்தது. சிருஷ்டி, அதன் இயக்கம் எல்லாம்ே நான் இன் ருஷ்டி, அத દૈ. がエ உச்சரிப்பும், விஸ்தரிப்பும்தானே! நம்பிக்கை, தானின் பக்க பலம் நேற்று இருந்தேன். இன்று இருக்கிறேன். நாளையிருப்பேன். என்றும் இருப்பேன்’ இதுதானே நம்பிக்கை! நான் இன் ஸ்தாபிதம். நம்பிக்கை எனும் சொல்லுக்கு வேர்ச் சொல்லே நான்’தானோ? நேற்றைய நான் இலிருந்து இன்று நான் கவிதையை 药 நி இலிருந்து இன் து; தி சிருஷ்டிக்கிறேன். இன்று: நான்' என்னை விஸ்தரிக்கிறேன். நாளை: நேற்றைய கவிதையுடன் இன்றைய விஸ்தரிப் பைத் தொடர்ந்து என்னை உச்சரிக்கிறேன். நம்பிக்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/73&oldid=741960" இருந்து மீள்விக்கப்பட்டது