பக்கம்:அவள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கு புஷ்பம் 1ே இதில் பாருங்க அந்தப் பிள்ளைக்கு தன் விரோதிகள் யார் என்றுகூடத் தெரியாது. ஆனால் துப்பாக்கி தூக்கி விட்டது. இதைவிடப் பரிதாபம் என்ன வேண்டும். எங்கள் நிலைமை இப்படித்தானிருக்கிறது. நண்பர்கூட யார் என்று அறியோம். இந்தக் கவிதையில் அதுவும் சூசகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. அல்லது நாம் அறிய வேண்டும்.' - அவர் கொடுத்த விளக்கம் எனக்குத் திக் கென்று ஆகி. விட்டது. - தொடர்ந்தார். 'நண்பர் யார், விரோதி யார்? அறியாமலே தினம் மரணத்துடன் புழங்கிக் கொண்டிருக்கிறோம். மரணம் அண்டை வீட்டில் தங்கியிருக்கிறான். எந்தப் பக்கத்துக்கு அண்டை முன் வீடா. பின் வீடா, பக்கத்திலா? தெருக் கோடியிலா? Death is my reighbour. அவ்வப்போது கதவைத் தட்டுகிறான், இடிக்கிறான், உடைக்கிறான். அதனால் திறந்துவிட முடியுமா? ஆயினும் அண்டை வீட்டு உறவாச்சே!' சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் கசப்பு இல்லை. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.

  • இது பாருங்க. மனைவி சமையல் செய்துகொண் டிருப்பாள். திடீரென்று அபாயச் சங்கு ஊளையிடும். அடுப்பைத் தணிக்கக்கூட நேரமிருக்காது. ஒடி ஒளிந்து கொள்வோம். Ali CLEAR ஒலித்து வெளிவந்து பார்த் தால் வானவியில் பண்டம் தீய்ந்துபோயிருக்கும். அடுப்பு. எரிஞ்சுட்டிருக்கும். சில சமயங்களில் குண்டு விழாமலே அடுப்பிலிருந்து தீ இசை கேடாய்ப் பற்றிக் கொள்ளவும் வழி உண்டு. இதுதான் மரணத்தின் அண்டை வீட்டு உறிவு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/75&oldid=741962" இருந்து மீள்விக்கப்பட்டது