பக்கம்:அவள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜ்வாலாமுகி

எண்ணங்களைத் தோற்றுவிக்கவில்லை. தாமே தோன்றுகின்றன. தோன்றிய வண்ணமிருக்கின்றன என்றே எண்ணுகிறேன். எண்ணங்களின் உற்பத்தி இடம், மனம் என்று கொள்வோமானால், மனதினால் இயங்காமல் முடியவில்லை. அந்த இயக்கத்தை ஒரளவு கட்டுப் படுத்தலாமோ என்னவோ, அறவே தவிர்க்க முடியவில்லை. நான் எழுத்தாளன் எண்ணங்கள் என்னை இழுத்துச் செல்லும் வழியில் அவ்வப்போது அவை காட்டும் ஆசைமுகங்களில் என்னை இழந்து அவற்றைத் துரத்திச் செல்கிறேன். அப்புறம் ஒருநாள், அப்படிக் காட்டிய அத்தனை முகங்களும் ஒருமுகம், அது அவள் முகம் என்று உணர்ந்தேன், அடையாமுகம், பாராமுகம், கிட்டாநிலை. ஆனால் அதனால் தேடல் தீவிரம்தான் அடைகிறதன்றி, அலுக்கவில்லை, அடங்கவில்லை.

அவள் யார்?

மேல்கூற்றில் ஒரு மாற்றம். எண்ணத்தை நான் தோற்றவில்லை. ஆனால் எண்ணங்கள் தோன்றுவது தெரிந்தபின், நானும் எண்ணங்களைத் தோற்றுவிக்கிறேன். நான் தோற்றுவிக்கும் எண்ணத்துக்கு என் இஷ்ட உருவைக் கொடுக்க முயல்கிறேன். இஷ்டமும் எண்ணம் தான். எண்ணத்தின்மேல் எண்ணத்தை ஏற்றுகிறேன், பிறகு அந்த எண்ண உருவைச் செயல்படுத்திப் பார்ப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/79&oldid=1496351" இலிருந்து மீள்விக்கப்பட்டது