பக்கம்:அவள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

"நேத்து, கிணத்துலே தூர் வாரித்தா, வெளியில் கொட்டியிருந்த சேறை தோண்டிண்டிருந்தேன். அவ்வப்போ கிணத்துள் விழுந்துடறதே சில்லுண்டி சாமான்கள் கிடைக்காதா? இவர் கிடைச்சார்."

உடனேயே பிள்ளையாருக்குக் கோவில் கட்ட ஆரம்பித்துவிட்டாள். ஹைமவதியின் உற்சாகம் அபூர்வமானது. ஆரம்ப சூரத்துடன் நின்றுவிடாது. யார் கேலி பண்ணினாலும் அவளுக்கு அக்கறையில்லை. சாமான்கள் உடனே அவளுக்கு எங்கே தான் கிடைக்குமோ?

வாசல் குறடோரமாய் ஒன்றரை அடி உயரத்துக்கு அவள் கையாலேயே இரண்டு மண் சுவர்கள் எழுப்பி, மேலே ஒரு ஜாதிக்காய்ப் பலகையைக் கூரை பதித்து உள்ளே பிள்ளையார் எழுந்தருளி விட்டார். இரவே மடியாய் கொழுக்கட்டை நைவேத்யம்.

ஒரிரு மாதங்களுக்குப் பின்னர், வீட்டைப் பழுது பார்க்க நேர்ந்தபோது கொல்லன், பிள்ளையாருக்குத் தன் காணிக்கையாக, உருப்படியாகச் செங்கல் சுவர்கள் எழுப்பி, மேலே கூரையெழுப்பி, பிள்ளையாருக்குக் கோவில் கட்டித் தந்துவிட்டான்.

ஹைமவதிக்குக் கண் கண்டது கை செய்யும். உடனே செய்துவிட வேண்டும்.

"சோம்பல் பட்டோம்னா, அப்புறம் மொச மொசாத் தான்."

***

மாலை, சரவணன் வந்தான்.

"ஆயாக் கிழவி செத்துப் போச்சி."

"எப்படி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/8&oldid=1495884" இலிருந்து மீள்விக்கப்பட்டது