பக்கம்:அவள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 லா. ச. ராமாமிருதம்

கொண்டாடல், அதைப் பிறர்மேல் கட்டாயமாய்ச் சுமத்தல், பக்கம் பக்கமாய் எழுதுதல், பக்கம் பக்கமாய்ப் பேசுதல்,~ என்னதான் இவை அத்தனையும்?

என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளல். ஆனால் இத்தனையின் அடியிலும் கடைசிவரை அனுபவிப்பது வேதனை.

ஏகலைவன் அம்புபோல், எண்ணக்கால் ஒன்றுவிடாது துளைத்து, என்-எண்ணத்தை வியாபித்துவிட்ட புற்று நீ

, கண்டு கொண்டேன். நீ என் ஆசைமுகம் இல்லை. ஆசைமுகமாயிருந்தால், உன் ஆயிரம் ஜாக்ரதையிலும், நீயோ நானோ ஏமாந்த சமயம் என் ஆசை முகத்தைக் கண்டிருப்பேன்.

நீ நினைவுமுகம். மனித பரம்பரையின் நினைவில், தனித்தனியாவும், தலைமுறை தலைமுறையாகவும் ஜன்மேதி ஜன்மமாய் ஊறிப்போன முகம். உனக்குத் தனி முகம் இல்லை. முகமேயில்லை. முகத்தின் இடத்தில், என் ஆசையில் பொருத்தி வைத்து மனதுள் முடிந்தால் பார்த்துக்கொண்டு, முடியாவிட்டால் கோபித்து, ஏமாந்து, ஏங்கி, அழுது குமுறுமுகம். அதனால் நீ -

ஓர் இடத்தில் மீனாகூி, ஓர் இடம் விசாலாகூி, ஓர் இடம் அகிலாண்டேஸ்வரி, எனக்குப் பெருந்திரு.

ஒரு சமயம் அம்மா, உடனே சோதரி, மனைவி, காதலி, என் குழந்தை, நண்பன் ஏதேதோ சொல்லத் தெரிந்த தெரியாத உறவுகள்; ஒவ்வோர் உறவும், அவ்வப்போது, அதனதன் பிறவி.

ஜன்மேதி ஜன்மமென்று சுலபமாகச் சொல்லி விட்டேன். ஆனால் பார்க்கப்போனால் ஜன்மமென்பது ஒரு நீண்ட நினைவுச் சரடுதானே! பிறவியென்றும் மரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/82&oldid=1496379" இலிருந்து மீள்விக்கப்பட்டது