பக்கம்:அவள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 லா. ச. ராமாமிருதம் முலைக்காம்பில் துளிக்கும் அமிர்தத்தில்... எருக்கையிலைக் காம்பை ஒடித்தால் புறப்படும் பாலில்... ஒ சொல்லி மாளாது. இன்னும் எத்தனை எத்தனையோ அத்தனையும் அவளுக்கு அர்ச்சனை. பாஷையே அதற்குத்தான். ஆங்காங்கே அவ்வப்போது அடையாளங்களில், உவமைகளில், உருவகங்களில், உடமேயங்களில் தெரிந்த பார்வைக்கு, காத்திருக்கும் பாத்திரத் துக்கு ஆனால் எதிர்பாராத சமயங்களில் குறியீடாக வெளிப்படுத்திக் கொள்வதன்றி, அருவத்தின் நிராமயம், தனி உரு ஆகமாட்டாள். உன் ஆசைமுகத்தை, ஆசைப்படிக் கண்டுகொள். நினைவுமுகம் தனிமுகம் கிடைக்காது; கிடைப்ப தற்கில்லை. ஆகவே, படத்தின் முன் மீண்டும் நிற்கிறேன், படுக்கப் போகுமுன் அவளிடம் சொல்லிக்கொள்ள. அருவத்துடன் உறவாட எனக்குத் தகுதியில்லை. எனக்கு உருவத்தின் உறுதுணை வேண்டும். உன்னிடத்திலும் அருவத்தின் அம்சங்கள் செறிந்து இல்லையா? உன்னைச் செதுக்கிய ஸ்தபதியின் ஸ்வயார்ப்பணம்! மந்திரம், உச்சாடனம் உருவேற்றல், உபசாரம், அலங்காரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/88&oldid=741976" இருந்து மீள்விக்கப்பட்டது