பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அன்று அவளிடம் மிடுக்கும் பெருமையும் இருந்தன. இன்று துயரமும் ஏக்கமும் அதிகமிரும்ந்தன, ஏன்? காரணம் என்ன ?

அவளிடமே கேட்டேன்.

'எக்ஸ்ட்ராப் பிழைப்பைப் பற்றி என்ன சொல்ல? எப்படியாவது உயிர்வாழ வேண்டியிருக்குதே' என்று அலுப்பாக மொழிந்தாள் அவள்.

சினிமா உலக 'எஸ்ட்ரா' நடிகைகளின் வாழ்க்கையைப் பற்ற ஆராய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு, பணம் 'தண்ணீர் பட்ட பாடு' படுகிற அந்த உலகத்தின் கீழ்ப்படியில் உள்ளவர்கள் நிலை எப்படி - யிருக்கிறது; நட்சத்திரங்களைப் போல் பகட்டும் படாடோபமுமாக வாழ முடியாவிட்டாலும், சௌக்கியமாகக் காலந்தள்ள வசதிகள் கிடைக்கின்றனவா என்றறிய வேணும் என்ற அவா உண்டு எதற்குமே வெளியே புலனாகாத 'மறுபுறம்' ஒன்று உண்டல்லாவா? இந்தக் கலையுலகின் மற்றோர் புற மர்மங்களை அறிய வேண்டும் என்ற நினைப்பு எனக்கு உண்டு..

அவள் மூலம் ஒரு சிரிதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினத்தேன், அதனால் மற்றவர்வகள் அர்த்தம் நிறைந்த பார்வை பரிமாறிக் கொள்வதையும், குறும்பாகச் சிரித்துக் கொள்வதையும், மெல்லொலி பரிமாறி ரகசியம் பேசுவதையும் உணரமுடிந்தாலும் கவனியாதது போல் ஒதுங்கி விட்டேன்.

மற்றவர்கள் கண்ணெறிந்தபடி நகர்ந்தார்கள், ஒரு 'எக்ஸ்ட்ரா' 'ஏண்டி புஷ்பா, இப்ப வரப்போறியா? இல்லே, உனக்கு ஜோலி இருக்குதா?' என்று குத்தலாகக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

அவளுடைய தோழி வரவும், அவளும் சென்றாள். 'புஷ்பா யாரடி அது? பழைய சினேகமா? அல்லது புது நட்பா?' என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் தோழி.

'போடி!' என்று அவள் கண்டித்த குரலும் காதில் விழுந்தது.