பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

எனக்கு எக்ஸ்ட்ரா 'க்கள் மீதும் அதிக வெறுப்பு ஏற்பட்டது, சினிமா, படவுலக பிரம்மாக்கள், ஸ்டுடி.யோ பூமி, நட்சத்திரங்கள், எக்ஸ்ட்ராஸ் எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் வெறுப்பும் ஆங்காரமும் அதிகரித்தன.

'ரொம்ப நேரமாக என் கூடப் பேசிக் கொண்டிருந்தாளே, அது யாரப்பா அவ?' என்று கேட்டபடி வந்து சேர்ந்தார் நண்பர்.

'அவள் ஒரு எக்ஸ்ட்ரா?' என்று நான் சொன்ன தோரணியே நண்பரை வீண் பேச்சு வளர்க்க விடாமல் தடுத்துவிட்டது.

'ஓ! அவளா ? முன்பே பார்த்திருக்கிறோமே' என்று சமாளித்துக் கொண்டார் அவர்.


2

அவன் ஒரு 'எக்ஸ்ட்ரா'.

சினிமா உலகத்தில் இடம் பெற வேண்டும் எனும் ஆசை உந்த ஊரை விட்டு ஓடிவந்தபோது அவள் நினைத்ததில்லை என்றும் தான் 'எக்ஸ்ட்ரா' வாகவே இருக்க வேண்டியிருக்கும் என்று.

அவள் பெயர் புஷ்பர். இன்று,

முன்பும் அதே பெயர்தானா ? - சொல்வு முடியாது, அநேகமாக, அவள் பூர்வாசிரமப் பெயர் புஷ்பா என்று இராது. ஏதாவது பிச்சம்மாளாகவோ, பேச்சியம்மாள் என்றோ --இந்த தினுசில் எப்படியோ ஒன்று - இருந்திருக்கலாம். சின்மா உலகில் புகுந்தவுடன் ஆளே மாரிவிடவேண்டும் என்பதற்கு அடையாளம் தானோ என்னவோ முதலில் ஏற்கபடுகிற பெயர் மாற்றம்!.

எப்படியோ போகிறது! அவளுக்கு புஷ்பா என்ற பெயர் அழகாக இருந்தது.