பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

காரணமோ? எதாக இருந்தால் தான் என்ன! எப்படியும் போகிறாள். அவள் யார் ? ஏதோ ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவ்வவவு தானே என்று எண்ணினேன்.

நான் நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டாள் அவள். ரயில் புறப்பட்டு ஓடத் தொடங்கியதும், அவள் ஜன்னல் அருகில் வருபவள் போல வந்து நின்றாள். 'அங்கே செளகரியமான இடமிருக்கு. நான் மதுரைக்குப் போகிறேன். உங்களிடம் எவ்வளவோ விஷயங்கள் சொல்ல வேண்டும். தயவு செய்து அந்த இடத்துக்கு வாருங்களேன்' என்று கெஞ்சுதலாகக் கூறினாள் அவள்.

அவளை கவனித்தேன். அவள் மிகவும் மாறிப்போயிருந்தாள். முன்பிருந்த அழகு இல்லை, இளமை இல்லை, மிடுக்கும் மினுமினுப்புமிமில்லை, கவர்ச்சி இல்லை. கசங்கிப்போன மலர் போல் காட்சியளித்தாள். முகத்திலே சோகம் நிரந்தரமாகக் குடியேறி வாழ்ந்தது. கன்னங்கள் வறண்டு, காமத்தின் மிகுதியான வடுக்கள் ஏற்று காண அருவருப்பு அளிப்பனவாக மாறியிருந்தன. அவளது அழகான கண்களிலே ஒளியில்லை. அவள் செயற்கை அலங்காரத்திலும் சிரத்தை காட்டவில்லை. அவளைப் பார்க்கும் போது எனக்கு அவளிடம் அனுதாபமே மிகுந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக வேறொரு மாறுதல் கண்களை உறுத்தியது. ஒல்லியாய், துவண்டு விழும் கொடி போலிருந்த அவளுடைய வயிறு பருமனாக வளர்ந்திருந்தது விகாரமாக்த் தான் தோன்றியது. அவள் கர்ப்பவதி.

உலகத்தின் உண்மைத் தன்மையை ஒருவாறு புரிந்துவரும் எனக்கு அவளின் கதி பளிச்செனப் புரிந்தது. அவள் கருவுற்றதும், அவளைக் கொஞ்சிக்குலாவிய கயவன் அவளைக் கைவிட்டிருப்பான். அவளுக்கு பிழைக்கும் வழி கூடக் கிட்டியிராது? அவளுடைய முழுக்கதையையும் அறிய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவள் உதவியால் சினமாக் கலையுலக 'எக்ஸ்ட்ரா' க்களின் வாழ்க்கையையே