பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பிழைப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை, நீண்ட கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன் துணிவு வரவில்லை. முதலில் உங்களுக்குக் கடிதம் எழுதவே எனக்கு பயம். ஆமாம். பயம் என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவதாக, சில விஷயங்களை எப்படி எழுத்திலே வெட்கமின்றிக் கூறுவது என்ற தயக்கம். மூன்றாவதாக, என்னால் தொடர்பாக மனசில் எழுதுவதை எழுதமுடியாது என்ற காரணம். இப்படிக் காலம் ஓடிவிட்டது. நல்லவேளை. இன்று சந்தர்ப்பம் துணை புரிந்தது. இதுதான் உங்களைப் பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென நினைக்கிறேன், எனது எதிகாலத்தை எண்ணிப் பார்க்கும் மனத்தெம்பு கூட எனக்கில்லை, எதிகாலம் பேய் மாதிரி இருள் படிந்து பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது. சிலசமயம் நான் செத்துப் போவேன் என்ற எண்ணம் எழுகிறது. நானே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைப்பது உண்டு. அதற்குக் கூட துணிச்சல் இல்லை. சாகவும் பயமாக இருக்கிறது. வாழவும் பயமாக இருக்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை, ஒன்றுமே ஓடவில்லை, நான் மதுரைக்குப் போகிறேனே அங்கு போய் என்ன செய்ய போகிறேன்? எனக்கே தெரியாது. ஆனால் எங்காவது போயாக வேண்டுமே. பட்டணத்திலிருந்துதான் என்ன செய்வது? செலவுக்கு வழி? மதுரையில்தான் அம்மா இருக்கிறாள். அவளிடம் எப்படிப் போய் முகத்தைக் காட்டுவது என்று இதுவரை இருந்தேன். வேறு வழி எதுவுமில்லை என்று நெருக்கடி ஏற்பட்டவுடன் வருவது வரட்டும் என்று கிளம்பிவிட்டேன். கெட்டுப்போன சிறுக்கி; தட்டுவாணி என்று எல்லோரும் ஏசுவார்கள் என்ன செய்வது?...'

அவள் தன் அனுபவத்தை விரிவாகவே சொன்னாள் . நான் அனுதாபத்துடன் கேட்டிருந்தது அவளுக்கு சிறு ஆறுதல்.

தான் எண்ணியபடி எதுவும் நடக்காது என்பதை உணர புஷ்பாவுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஆரம்-