பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பத்திலேயே கசப்பு தட்டி விட்டது. அவள் கம்பெனி கம்பெனியாகத் திரிந்தாள். முதளிகளைப் பார்க்க முடியவில்லை. ஸ்டுடியோ வாசிலில் காத்துக் கிடந்தாள். பயனில்லை கொண்டு வந்திருந்த பணம் கரைந்துவிட்டது; சாப்பாட்டுக்கும் தங்கவும் இடமில்லையே என்று எண்ணும்போது அவளுக்கு அழிகை வந்தது. அந்த சமயத்தில்தான் ஸ்டுடியோவைச் சுற்றிக் கொண்டிருந்த கறுப்பசாமி அவள் பாக்கம் வலை வீசி அவளை பிடிக்க முடிந்தது. அவன் பரிவாக விசாரித்து ஆறுதல் கூறியது வறண்ட வெயிலுக்குப்பின் குளிரக் குளிர மழை பெய்தது போலிருந்தது. புதிதாகத் தானாகவே போய் செந்துவிட முடியாது; அனுபவமுள்ளவர்களின் உதவி வேணும்; தனக்கு பலரைத் தெரியும்; தான் எத்தனையோ பேர்களை சினிமாவில் சேர்த்து விட்டது உண்டு என்று அவளுக்குச் சொன்னான். வீடுக்கு வந்து தங்கலாம்; அம்மா இருக்கிறாள். கவனித்துக் கொள்வாள் என்றும் தெரிவித்தான். புஷ்பாவுக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. ஆகவே அவனுடன் சென்றாள்.

அவன் அவளை ஒரு முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அவர் மறுபடி வரச் சொன்னார். வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான். ஒருவரிடம் தனியாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திரும்பி வந்ததும், அங்கு சான்ஸ் கிடைக்கலாம் என்று அறிவித்தான். தினம் அவரிடம் சொல்லியிருக்கிறேன் என்று உறுதி கூற அவன் தவறுவதில்லை. சான்ஸ் கிடக்க்குமா என்ற சந்தேகம் பிறந்தது அவளுக்கு. மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் சந்தோஷமாக வந்து, அவளை அழைத்துப் போனான். அம்முறை ஏமாற்றமில்லை.

அவள் கனவு கண்டாள், முதல் படத்திலேயே நல்ல சான்ஸ் கிடைக்கும் ஏதோ நாலைந்து ரீல்களில் தோன்றிப் பேசி, படம் பார்க்கிறவர்கள் நினைவில் நிற்கும்படி ஒளிர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என எண்ணினாள். பிறகு தானாக சான்ஸ்கள் வரும் இரண்டு மூன்று படங்களுக்குப்