பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அவள் நாகரிகமானவள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின்னல் சிரிப்பு ஒன்றை உகுத்தாள்.

‘என்ன? என்ன வேணும்?’என்று கேட்கலாமா என யோசிக்கும் வேளையிலே, அவள் கேட்டு விட்டாள் ‘டைரக்டர் ஸார் இல்லையா?’ என்று.

‘டைரக்டர் ஸாரா? அப்படி இங்கே ஒருத்தருமில்லையே’ என்றேன்.

‘இல்லே...வந்து...எனக்கு சினிமாவிலே சான்ஸ் - கிடைக்குமான்னு.... ......’ என்று வார்த்தைகளை மென்று விழுங்கித் துப்பினாள் அவள்.

‘இது சினிமாவுக்கு ஆள் சேர்க்கிற இடமில்லை. பேப்பர் ஆபிஸ். இங்கே டைரக்டர் கியரெக்டர் யாரும் கிடையாது’ என்று சொன்னேன்.

‘இங்கே போய் விசாரித்தால் தெரியும்னு சொன்னாங்களே’ என்றாள் அவள்.

அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது.

‘இங்கே அதெல்லாம் விவரம் தெரியாது. ஏதாவது படக் கம்பெனிகளிலோ, ஸ்டுடியோவிலோ போய் விசாரியுங்கள்-- என்றேன்.

அவள் அசையா மடந்தையாக நின்றாள். அங்கு மிங்கும் பார்த்தாள். பிறகு கைக்கட்டை விரலின் நகத்தைக் கடித்துக் கோண்டே பேசினாள். 'நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். சினிமாவிலே சேரவேணும்னு ஆசை. இங்கே யாரையும் தெரியாது. நீங்க யாருக்காவது சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் ....... -

அவள் சீக்கிரம் வெளியேறினால் போதும் என்று பட்டது எனக்கு, ‘சினிமாவில் சேருவது நீங்கள் நினைப்பது போல் லேசான காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை. சினிமா உலகத்தில் எனக்கு யாரையுமே தெரியாது. அதனாலே நீங்க போகலாம்’ என்து வழியனுப்பி, வைத்தேன்.